இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று (ஜுன் 2) தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப் பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். என்றென்றும் நினைவில் நிற்கும் படி ஏராளமான பாடல்களை தந்து கெண்டிருக்கிறார். இசை மேதையாக உள்ளார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இசை நிகழ்ச்சியின் போது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜாவிடம், கடந்தகால பாடல்களைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர் கூறுகையில், கமல்ஹாசன், அபூர்வா சகோதரர்கள் படத்தை உருவாக்கும் போது, என்னிடம் பாடலுக்கான சூழலைக் கூறினார். அதற்கு நான் ஒரு டியூனை அமைத்தேன். ஆனால், அதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. பாடலின் உதாரணத்தைக் கொடுத்தார். அதன் அடிப்படையில் புது மாப்பிள்ளைக்கு என்ற பாடலை அமைத்தேன். கமலுக்குக் காட்டுவதற்கு முன்பே அந்தப் பாடலைப் பதிவு செய்தேன். அவர் அதைக் கேட்டதும், பாராட்டினார் என்றார்.
1989-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோரர்கள் திரைப்படம் வெளியானது. குள்ளமாக இருக்கும் கமல் ஒரு பெண்ணை காதலிக்கும் போது புது மாப்பிள்ளைக்கு என்ற பாடல் படத்தில் வரும். ஒரிஜினல் பாடலில் இருந்து அதை மிகக் குறைவாகவே மாற்றினேன். ஆனால், யாராலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இசையமைப்பது ஒரு மேஜிக் செய்பவரின் வேலையைப் போன்றது என்றார்.
மேஜிக் செய்பவர்களைப் போல சில சமயங்களில் இசைக் கலைஞர்களும் அதை செய்ய வேண்டும் என்கிறார் இளையராஜா. மனிதர்களால் புறாவை உருவாக்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், குறைந்தபட்சம் அந்த ஒரு வினாடியாவது, அந்த தந்திரத்தில் நாம் விழுந்து விடுகிறோம். அதேபோல், இசையும் கூட ஒருவகை ஏமாற்றுதான் என்று நம்புகிறேன். மேலும் நிறைய ஏமாற்ற முடிந்தவர்கள் இந்த நாட்டில் பிரபலமடைந்தனர். பாலசுப்ரமணியம் உட்பட நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனென்றால் அவர் பாடல்களை இயற்றுகிறார், மேலும் பல இசையமைப்பாளர்களின் தாக்கத்தையும் அவர் பெற்றுள்ளார் என்றார்.
1966-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் அன்பே வா திரைப்படத்தில் இருந்து நான் பார்த்ததில்லை என்ற பாடலை கமல் என்னிடம் உதாரணமாக காண்பித்தார். அபூர்வ சகோதரர்கள் பாடல் காட்சிக்கு இவ்வாறு வேண்டும் என்று தனது எதிர்பார்ப்புகளை விளக்கினார். நான் பார்த்ததில்லே காதல் பாடலை புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
இதை வைத்து தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பாடல் இடம்பெற்றது. நினைவில் கொள்ளுங்கள், இளையராஜா எம்.எஸ்.வியின் ட்யூன்களை அப்படியே எடுக்காமல் மாற்றம் செய்து பயன்படுத்தினார். னது புத்திசாலித்தனம், தனித்துவம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் புதிய மற்றும் அசாதாரணமான ஒன்றை வடிவமைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“