Happy Birthday Ilaiyaraaja: இளையராஜா பழைய பாடல்களில் இருந்து டியூன்களை காப்பி அடித்தவரா?

இளையராஜா பழைய பாடலை தனது சொந்தமாக மாற்றும் அளவிற்கு அதை உருவாக்கினார்.இதை காப்பியடிப்பது என சொல்ல முடியாது,இந்த இடத்தில் தான் திறமைசாலிக்கும், காப்பியடிப்பவருக்குமான மெல்லிய கோடு வரையப்படுகிறது.

Ilayaraja and Prasad Studio

இசை ஜாம்பாவான் இளையராஜா தனது 78வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவர் ஒரு சகாப்தம். தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார். அவருடைய இசைக் குறிப்புகளை பகுப்பாய்வு செய்து பிரிக்கும் ஏராளமான கட்டுரைகள் வெளி வந்துள்ளன. எனினும் இளையராஜா ஒரு பின்நவீனத்துவவாதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பின்நவீனத்துவம் என்று அழைக்கப்படும் ஒரு கலை சிந்தனை அமைப்பின் அடிப்பகுதியான கலையில் எதுவும் புதிதல்ல என்று அவர் நம்புகிறார்.

இளையராஜா ஏராளமான பாடல்களை மற்ற இசையமைப்பாளரிம் இருந்து காப்பி அடித்ததாக பலரும் கூறியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு லைவ் ஷோவில் இளையராஜாவிடம் எஸ்பிபி திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். கடந்த கால பாடல்களை குறிப்பிட்டு, இதே போன்று வழங்கும்படி கேட்கிறார். அதற்கு இளையராஜா இது ஒவ்வொறு இசை அமைப்பாளரின் வாழ்க்கையிலும் நடக்கும் என்கிறார்.

கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கதாபாத்திரத்திற்கு பாடல் வேண்டும் என்று கேட்க அதற்கு இசைஞானி தனது பாணியில் ஒரு அற்புதமான மெலோடி இசையை இசைத்து காண்பித்துள்ளார். அதைகேட்ட கமல்ஹாசன் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு மெலோடியிலேயே கொஞ்சம் துள்ளல் கலந்து மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உதராணத்திற்கு எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடலான நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் என்ற பாடலை மேற்கொள் காட்டி இதுபோன்ற ஒரு பாடல் வேண்டும் என இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு இசைஞானி அதே டோனில் ரப்பபப்பா ரப்பபரே என கமல் கேட்டவாறு இசையமைத்து கொடுத்துள்ளார். அதைக்கேட்ட கமல் உடனடியாகவே பிரமாதமாக இருக்கிறது என சொல்லி இந்த டியூன் போட எப்படி ஐடியா வந்தது என கேட்டுள்ளார். அதற்கு இசைஞானி நீங்கள் கேட்டதை தான் நான் திருப்பி கொடுத்துள்ளேன் என கூறியவாறு நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் பாடலை புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே நல்ல யோகமடா என திருப்பி கொடுத்தகூறியுள்ளளார். இந்த தகவலை பகிரிந்துகொண்ட பின் இசையமைப்பது என்பது ஒரு மேஜிக்மேன் வேலை போன்றுதான் என கூறியிருந்தார்.

மேஜிக்மேனை போலவே இசையமைப்பாளர்களும் சில சமையங்களில் ஒரு மாம்பழத்திலிருந்து புறாவை வெளியே இழுக்க வேண்டும். நாம் அனைவருக்குமே மனிதர்களால் புறாவை உருவாக்க முடியாது என்பது தெரியும். ஆனால் அந்த ஒரு நொடி, மேஜிக்மேனின் அந்த தந்திர ட்ரிக்கை ரசிக்கிறோம். அதேபோல் இசைக்கூட ஒரு வகையான ஏமாற்று வேலை என நம்புகிறேன். ஏமாற்ற தெரிந்தவர்கள் இந்த நாட்டில் பிரபலமடைகின்றனர். பாலசுப்பிரமணியன் உட்பட நானும் இதற்கு விதிவிலக்கல்ல என இசைஞானி கூறியிருந்தார்.

ஆபுர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற புது மாப்பிள்ளைக்கு பாடலுக்காக
இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதனின் அன்பே வா படத்தில் இடம்பெற்ற நான் பார்த்ததிலே டியூனை எடுக்கவில்லை. அதிலிருந்து தன்னை கவர்ந்த சிலவற்றை மீண்டும் பயன்படுத்தினார். அதை தன்னுடைய பாணியில் சிலவற்றை சேர்த்து க்ரியேடிவ்வாக வடிவமைத்தார். அந்த பாடலை தனது சொந்தமாக மாற்றும் அளவிற்கு அதை உருவாக்கினார்.இதை காப்பியடிப்பது என சொல்ல முடியாது,இந்த இடத்தில் தான் திறமைசாலிக்கும், காப்பியடிப்பவருக்குமான மெல்லிய கோடு வரையப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Happy birthday ilaiyaraja when the genius composer spoke about picking old tunes for new songs

Next Story
சபாஷ்… பவித்ரா, பிரியங்கா, கனி செய்த நல்ல காரியம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com