Advertisment

HDB JYOTHIKA : ஜோதிகாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் 7 முக்கிய படங்கள்

அக்டோபர் 18 (இன்று) ஜோதிகா தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் முக்கியமான ஏழு படங்கள் இங்கே பார்க்கலாம்

author-image
WebDesk
Oct 18, 2023 13:32 IST
New Update
Jyothika

1998 ம் ஆண்டு பிரியதர்ஷனின் இயககத்தில் இந்தியில் வெளியான டோலி சாஜா கே ரக்னா படம் மூலம் ஜோதிகா திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் எல்லா காலத்திலும் மிகவும் பிரியமான பெண் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜோதிகா. திரைத்துறையில் அறிமுகமான குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர். ஒரு கட்டத்தில், விஜய், அஜித், சூர்யா விக்ரம் மற்றும் மாதவன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment

தயாரிப்பாளர் சந்தர் சதனா மற்றும் சீமா ஆகியோரின் மகளாக ஷாமா காசி என்ற இயற்பெயர் கொண்ட ஜோதிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நக்மாவின் சகோதரி ஆவார். 1998-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் இந்தியில் வெளியான டோலி சாஜா கே ரக்னா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  மலையாளத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படம் அணியாதிபிரவு (1997) (தமிழில் காதலுக்கு மரியாதை) என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில்  ஜோதிகா தனது நடிப்பிற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை.

அதன்பிறகு எஸ்.ஜே. சூர்யாவின் வாலி (1999) மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த ஜோதிகா, குறுகிய காலத்தில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். வாலி படத்தில் இவர் நாயகி இல்லை என்றாலும், அவரது கேரக்டர் பாராட்டுக்களை பெற்றது. அதன்பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், அஜித்துடன் முகவரி, விஜயுடன் குஷி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த ஜோதிகா இன்று (அக்டோபர் 18) தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் முக்கியமான ஏழு படங்களை பார்க்கலாம்.

Kushi123

குஷி

ஒரே பெண் கதாநாயகியாக ஜோதிகாவின் முதல் மாபெரும் வெற்றிப்படம் எஸ்.ஜே. சூர்யாவின் குஷி (2000). விஜய் நாயகனாக நடித்த இந்த படம் ஜோதிகாவின் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது மட்டுமின்றி, அவரது உடல் அழகையும் பெரிதாக எடுத்துக் காட்டியது. கதாபாத்திரங்களான ஜெனி மற்றும் சிவா ஆகியோருக்கு இடையேயான காதல்-வெறுப்பு உறவை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அவரது நகைச்சுவைத் திறமையுடன், நுட்பமான சைகைகள் மூலமாகவும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் அவரது நடிப்பு திறன் பரவலாகப் பாராட்டப்பட்டது.

சிநேகிதியே

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருந்த இந்திய க்ரைம் த்ரில்லர்களில் படங்களில் ஒன்றாக சிநேகிதியே (2000) படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். ஜோதிகாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த படத்தில் அவருடன் ஷர்பானி முகர்ஜி இணைந்து நடித்திருந்தார். காதல் கேரக்டர்களை தாண்டிநடிப்பில் தனது பன்முக திறமைகளை வெளிப்படுத்திய ஜோதிகா இந்த படத்தின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். வாணி மற்றும் ராதிகா என்ற இரு கல்லூரி மாணவர்களைச் சுற்றியே நடக்கும் இந்த கதையில், அவர்களின் கவலையற்ற மனப்பான்மையால் அவர்கள் அடிக்கடி சிக்கலில் சிக்குகின்றனர். இதற்கிடையில், அவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இருப்பினும், உண்மையான குற்றவாளியை வெளிக்கொணர அவர்கள் எடுத்த முடிவு தான் படத்தின் கதை.

Kakkakka

காக்க காக்க

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான காக்கா காக்கா (2003), படத்தில் சூரியா மற்றும் ஜோதிகா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  ஒரு வெளிப்படையான ஆக்ஷன், வழக்கமான போலீஸ் படங்களை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த படம் புதிய காற்றின் சுவாசமாக இருந்தது. ஒரே மாதிரியான போலீஸ் கதையாக இல்லாமல, காக்க காக்க இரண்டிற்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்தியது. இதுபோன்ற கதைகளில் பெண் கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றாலும், ஜோதிகாவின் மாயா கேரக்டர் ஏசிபி அன்புசெல்வனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் போலீஸ் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்தது. காதல் மற்றும் பரபரப்பான ஆக்ஷன் இரண்டையும் சித்தரிப்பதில் ஜோதிகாவின் திறமை தெளிவாகத் தெரிந்தது,

பேரழகன்

மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான குஞ்சிக்கோனன் (2002) என்ற திரைப்படத்தின் ரீமேகாக வெளியான பேரழகன் படத்தில் ஜோதிகா இரட்டை வேடத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு இளம் கல்லூரி மாணவியாகவும் மற்றொரு வேடத்தில் ஏழை, பார்வையற்ற பெண்ணாகவும் நடித்திருந்தார். இந்த மாறுபட்ட கதாபாத்திரங்களை திறமையாக சித்திரித்த ஜோதிகாவின்  ஒவ்வொரு பாத்திரமும் தனித்தனியாக வித்தியாசம் காட்டிருப்பார். இப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பால் முதல் முறையாக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

Kushi123.

மொழி

2000 களில் மிகவும் விரும்பப்படும் தமிழ் காதல் திரைப்படங்களில் ஒன்று மொழி (2007). ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இந்த படம்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது. இந்த படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு பெண்ணாக நடித்த ஜோதிகா நடிப்பில் தனது அடுத்த பரிணாமத்தை காட்டியிருப்பார். அர்ச்சனா (ஜோதிகா) ஒரு தன்னம்பிக்கையான, தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக சித்தரிக்கப்பட்டார், ஜோதிகா இந்தக் கதாபாத்திரத்தை எந்தக் கட்டத்திலும் மிகைப்படுத்தாமல், குறைத்தும்விடாமல், அதன் நுணுக்கங்களைக் கவனமாகக் கண்காணித்து அந்த கேரக்டருக்கு திறமையாக உயிர் கொடுத்திருந்தார். திரைப்படத்தில் அவரது குறிப்பிடத்தக்க நடிப்பு மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றது.

பச்சைக்கிளி முத்துச்சரம்

கௌதம் வாசுதேவ் மேனனின் மிகவும் வழக்கத்திற்கு மாறான படங்களில் ஒன்றாக வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் (2007) படத்தில் ஜோதிகா தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். ஆரம்பத்தில் கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட மகிழ்ச்சியான குடும்ப படமாக வரும் இந்த கதையில், ஒரு கட்டத்தில் சிக்கலான காதல் கதையாக உருவெடுக்கும் நாயகன் வெங்கடேஷ் (சரத்குமார்) கீதாவை (ஜோதிகா) அவன் தினசரி ரயில் பயணத்தில் அடிக்கடி சந்திக்கிறான். இந்த சந்திப்பினால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கும், ஒரு த்ரில்லராக மாறும். ஏனெனில் கீதா ஒரு உள்நோக்கத்திற்காக அவருடன் பழகி வந்துள்ளார் என்பது வெளிவருகிறது. ஜோதிகாவின் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு குறைபாடற்றது, சிரமமின்றி கருணையுடன் எதிரியாக மாறும் தருணங்களை திறமையாக கையாண்டிருப்பார். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் அவருக்கு நிலையான ஒரு இடம் இருந்தபோதிலும், வில்லன் கேரக்டரின் நுணுக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு புத்திசாலித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

Kushi123.

நாச்சியார்

ஜோதிகாவின் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று நாச்சியார் (2018). பாலா இயக்கத்தில் வெளியான இந்த படம் இதுவரை ஆராயப்படாத ஜோதிகாவின் நடிப்பை வெளிப்படுத்தியது என்று சொல்லலாம்.. பாலாவின் முந்தைய படைப்புகளில் பொதுவாக சோகமான முடிவுகள் தான் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக, நாச்சியார் ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் படத்தை முடித்திருப்பார்.  இந்த படத்தில் ஜோதிகா முதன் முதலில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும்,  அதுவும் இரக்கமற்ற மற்றும் முரட்டுத்தனமான ஒரு பாத்திரமாக இருந்தாலும், அந்த கேரக்டரை காதல் கேரக்டர்களில் நடிப்பது போல எளிதாகவும் சித்தரித்தார். அவரது பேச்சு வார்த்தைகள் மற்றும் அவர் நடிப்பில் கொண்டுவந்த நுணுக்கங்கள் உட்பட அவரது நடத்தை மற்றும் உடல் மொழி, இதுவரை வெளிவராத அவரது திறனை வெளிப்படுத்தியது, பல்வேறு சிக்கலான பாத்திரங்களில் சிறந்து விளங்கும் திறனையும் வெளிப்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment