/tamil-ie/media/media_files/uploads/2019/06/Happy-Birthday-Kajal-Agarwal-HBD-Kajal-agarwal.jpg)
Happy Birthday Kajal Agarwal: கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
பரத் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், இயக்குநர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் நடித்தார்.
2009-ம் ஆண்டு இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் காஜல் நடித்த ’மஹதீரா’ படம், அவரின் மார்க்கெட்டை உயர்த்தி, முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுத் தந்தது.
இதன் பலனாக தமிழுக்கு வர முடியாத அளவுக்கு அவரின் தெலுங்கு மார்க்கெட் உயர்ந்தது. இருப்பினும் 2010-ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘நான் மாகன் அல்ல’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் காஜலை ரசித்தார்கள் தமிழ் ரசிகர்கள். 2012-ல் சூர்யாவுடன் ’மாற்றான்’, விஜய்யுடன் ’துப்பாக்கி’ ஆகிய இரண்டு படங்களும் காஜலுக்கு பெரும் வெற்றியைத் தந்தன.
பின்னர் ‘ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல்’ ஆகியப் படங்களில் தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ’குயின்’ ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’, ஜெயம் ரவியுடன் ’கோமாளி’ ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளன.
தவிர இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்திலும் காஜல் ஒப்பந்தமாகியிருந்தார். இருப்பினும் இந்தப் படம் தொடங்குவதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் இன்று தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ஐ.இ தமிழின் வாழ்த்துகள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.