Advertisment

Happy Birthday Kajal Aggarwal : சித்ரா தேவி பிரியாவாக எல்லோர் மனதிலும் நின்ற காஜல் அகர்வால்!

Happy Birthday Kajal Aggarwal : இவர்கள் இருவருடன் தான் காஜல் புகைப்படங்கள் எடுப்பது, ஷாப்பிங் செல்வது, பிறந்த நாளை கொண்டாடுவது என அதிக நேரம் செலவழிப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Kajal Aggarwal

Happy Birthday Kajal Aggarwal

Happy Birthday Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காஜல் இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட் தொடங்கி, டோலிவுட், பாலிவுட் வரை இருக்கும் அவரின் ரசிகர்கள் காஜல் பிறந்த நாளை காமன் டிபி வைத்தும், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் இருக்கும் காஜல் ஃபேன்ஸ் ஃபேட்சகள் மூலமாகவும் விதவிதமான பிறந்த நாள் வாழ்த்துக்களை காஜலுக்கு தெரிவித்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் தமிழ் சினிமாவில் காஜல் அகர்வால் செய்த சில கதாபாத்திரங்கள் மக்கள மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளதுள்ளன. பொம்மலாட்டம் தொடங்கி மெர்சல் வரரை தமிழில் காஜல் நடித்த பல படங்கள் ஜிட் அடித்துள்ளன. விஜய்,அஜித், சூர்யா, தனுஷ் ஜீவா என முண்னிணி கதாநாயர்கள் பலருடனும் காஜல் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

குறிப்பாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தில் சித்ராதேவி பிரியா என்ற கதாபாத்திரத்தில் காஜலின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. காஜல் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி ஹீரோயினாக முதன்முறை நடித்தது இந்த படத்தில் தான். ”சித்ரா தேவி பிரியாவின் இசை மழையில் நனைய தயாரா?” என்ற வசனத்தில் தொடங்கி ’ஒரு இதயம் இரு இதயம் ஆனதே.. அந்த ஒரு இதயம் நொருங்கி போனதே” என்று கவிதை எழுவதும், நடனம் கற்பது என படத்தில் காஜல் அதகளப்படுத்தி இருப்பார்.

happy Birthday Kajal Aggarwal happy Birthday Kajal Aggarwal

இன்றும் அந்த படத்தை பார்க்கும் பலரும், சந்தானத்தின் காமெடியை விட காஜலின் காமெடியை அதிகளவில் ரசிப்பர். திரைத்துறையில் காஜலின் பயணம் மாடலிங் மூலமே ஆரம்பமானது. அவரின் குடும்பத்தில் எவருமே சினிமா பின்னணியில் இல்லை. கல்லூரி படிப்பை முடித்து விட்டு நண்பர்களுடன் மாடலிங் செய்து வந்த காஜல் தமிழில் முதன்முறையாக பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

அதன் பின்பு, தெலுங்கில் ராம்சரணுடன் நடித்த மகதீரா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு தான் காஜல் அகர்வாலை சினிமா உலகம் சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்றது. அதன் பின்பு கார்த்தியுடன் நான் மகான் அல்ல, விஜய்யுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், தனுஷூடன் மாரி, தெலுங்கில் ஜூனியர் எம்.டி. ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், ரவிதேஜா என மாஸ் ஹீரோக்களுடன் காஜல் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

 

happy Birthday Kajal Aggarwal happy Birthday Kajal Aggarwal

சினிமாவில் காஜலின் இரண்டு நண்பர்கள் சமந்தா மற்றும் தமன்னா.இவர்கள் இருவருடன் தான் காஜல் புகைப்படங்கள் எடுப்பது, ஷாப்பிங் செல்வது, பிறந்த நாளை கொண்டாடுவது என அதிக நேரம் செலவழிப்பார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment