உலக நாயகன் கமல் ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

Happy Birthday Kamal Haasan: நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும், பத்தொன்பது பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 

Kamal Haasan’s Rare Images: நடிகர் கமல் ஹாசன் சிறந்த தொழில் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார். 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இந்தியாவில் பல திரைப்பட துறைகளில் பணியாற்றியுள்ளார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், ராஜா பார்வை, அபூர்வ சகோதரர்கள் மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் போன்ற பிளாக்பஸ்டர்களை கொடுத்திருக்கிறார். அவரது நடிப்பில் மறக்கமுடியாத பாலிவுட் படங்கள் ஏக் துஜே கே லியே, சாச்சி 420, சாகர், ஹே ராம், சத்மா என நிறைய இருக்கின்றன. தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கமல் ஹாசன், அரசியல் களத்தில் இறங்கி, மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியையும் நிறுவினார்.

கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை பெற்றவர் கமல். அதோடு நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும், பத்தொன்பது பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இன்று தனது 64-ம் வயதைக் கடக்கும் கமலின் அரிய படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

happy birthday kamal haasan, kamal rare images

கமலும் ஸ்ரீதேவியும்

happy birthday kamal haasan, kamal rare images

ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசன்.

happy birthday kamal haasan, kamal rare images

கமல்ஹாசன் தனது மெளனப் படமான புஷ்பக்கிலிருந்து ஒரு ஸ்டில்

happy birthday kamal haasan, kamal rare images

இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் கமல் நடித்துள்ளார்.

happy birthday kamal haasan, kamal rare images

அவ்வை சண்முகி படத்தில் கமல் ஹாசன்

happy birthday kamal haasan, kamal rare images

கமல்ஹாசன் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர்

happy birthday kamal haasan, kamal rare images

கமல் களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

happy birthday kamal haasan, kamal rare images

கமல் 1975 ஆம் ஆண்டு தான் நடித்த  அபூர்வ ராகங்கள் படத்தில் அதிக அங்கீகாரத்தைப் பெற்றார், அதில் வயதான பெண்ணைக் காதலிக்கும் ஆணாக அவர் நடித்தார்.

happy birthday kamal haasan, kamal rare images

60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கமல் ஹாசன் 4 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

happy birthday kamal haasan, kamal rare images

கமல்ஹாசனுக்கு பத்ம பூஷண் விருதை 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கியது.

happy birthday kamal haasan, kamal rare images

கமல்ஹாசன் ஏக் துஜே கே லியே (1981) மூலம் இந்தியில் அறிமுகமானார்.

happy birthday kamal haasan, kamal rare images

2008 ஆம் ஆண்டு வெளியான தசவதாரம் திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்தார் கமல் ஹாசன்.

happy birthday kamal haasan, kamal rare images

பல மொழிகளில் 19 ஃபிலிம்ஃபேர் விருதுகளை கமல் வென்றுள்ளார்.

happy birthday kamal haasan, kamal rare images

2016-ம் ஆண்டு ஃபிரான்ஸ் அரசாங்கம் கமலுக்கு செவாலிய விருதளித்து சிறப்பித்தது.

happy birthday kamal haasan, kamal rare images

கமல்ஹாசனின் தான் இயக்கும் மருதநாயகம் படத்தை 1997 ஆம் ஆண்டு இரண்டாம் ராணி எலிசபெத்தின் இந்திய பயணத்தின் போது தொடங்கினார். ஆனால் அப்படம் முழுமை பெறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. 

happy birthday kamal haasan, kamal rare images

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் அவருக்கும் இன்னும் பெருமை சேர்த்தது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close