ஹீரோயிசத்தை நம்பாத ஹீரோ: கார்த்தியின் டாப் 5 படங்கள்

கார்த்தி ஒருபோதும் ஹீரோவாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை.

Happy Birthday Karthi : நடிகர் சூர்யாவின் தம்பி என்று நன்கு அறியப்பட்ட நடிகர் கார்த்தி, மெயின் ஸ்ட்ரீம் சினிமா ஹீரோ அல்ல. திரைப்பட இயக்குநர், மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2007-ஆம் ஆண்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் படமான ’பருத்திவீரன்’ மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, ’நான் மகான் அல்ல’, ’மெட்ராஸ்’ மற்றும் ’கைதி’ போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புப் பாதையை செதுக்கினார். இன்று 43-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்தியின் சிறந்த 5 படங்களைப் பார்ப்போம்…

தமிழகத்தின் கடைசி ஜமீன்தார்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு

பருத்தி வீரன்

பருத்தி வீரனை தனது முதல் படமாக மிக தைரியமாக தேர்ந்தெடுத்தார் கார்த்தி. அடித்து நொறுக்கப்பட்ட பாதையில் அவர் சோதனை செய்தது மட்டுமல்லாமல், தனது வருகையால் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். மெட்ராஸ் சிறைக்குப் போவதை கனவாகக் கொண்ட ஒரு மோசமான, இளைஞனை மையமாகக் கொண்ட இந்த படத்தில், கார்த்தியின் அசைக்க முடியாத நடிப்பு அவருக்கு பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.

நான் மகான் அல்ல

சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தை மசாலா கதையாக எளிதாக எழுதலாம். இந்த படத்தில் கார்த்தி ஒரு மகிழ்ச்சியான இளைஞர்.  அவருடைய வாழ்க்கை எளிய நடுத்தர குடும்பத்தைச் சுற்றி வருகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த படம், சில அதிர்ச்சியூட்டும் உண்மையான சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு த்ரில்லர். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான ஒரு உள்ளூர் கும்பலை பழிவாங்கும் ஒரு பையனின் மிகச்சிறந்த நடிப்பை கார்த்தி வழங்கினார். இறுக்கமான கதை மற்றும் யதார்த்தமான ஸ்டண்ட் காரணமாக இந்த திரைப்படம் பாராட்டப்பட்டது. வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தபோதிலும், இந்தப் படம் இன்னும் மிகப் பெரிய ரசிகர்களைக் கொண்டுள்ளது.

மெட்ராஸ்

இயக்குனர் பா ரஞ்சித்தின் மெட்ராஸ், வட சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு ஹவுஸிங் போர்டில், நடுத்தர வர்க்க குடும்பங்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு யதார்த்தமான பார்வையை நமக்குத் தருகிறது. இன்றும் கூட நாட்டில் நடைமுறையில் இருக்கும் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்க,  அரசியல்வாதிகள் தங்கள் ஈகோக்களை பொது மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தி, அவர்களைத் தூண்டுகிறார்கள் என்பது பற்றியது. மெட்ராஸில், கார்த்தியின் நடிப்பு அவரது தேசிய விருது பெற்ற முதல் படமான பருதிவீரனுக்குப் பிறகு சிறந்த ஒன்றாகும்.

கொம்பன்

எம்.முத்தையாவின் கிராமிய ஆக்‌ஷன் படமான, கொம்பன் மேற்கூறிய படங்களைப் போல நல்ல கதைகளம் கொண்டதல்ல. ஆனால் அது கார்த்தியை மிகவும் வித்தியாசமான பரிமாணத்தில் காண்பித்தது. தடிமனான ஹேண்டில்பார் மீசை மற்றும் லுங்கி என இப்படத்தில், கார்த்தி அச்சு அசல் கிராமத்துக்காரராகவே நடித்தார். கார்த்தியின் அந்த புத்துணர்வான லுக்கை தவிர, விவாதிப்பதற்கு கொம்பனில் எதுவுமே இல்லை.

Coronavirus Live Updates : 77,103 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்

கைதி 

சில ஆண்டுகளுக்கு முன்பு ’மாநகரம்’ படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த, லோகேஷ் கனகராஜ் ’கைதி’யில் இன்னும் வலுவான இயக்குநராக பேசப்பட்டார். இடைவிடாத, பஞ்ச் ஆக்ஷன் படம், அதன் இதயத்தை சரியான இடத்தில் வைத்திருந்தது. இது ஒரே இரவில் இது நான்கு மணி நேர இடைவெளியில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியது. தனது திரை அவதாரங்களின் சிறந்த ஒன்றில், டில்லி கதாபாத்திரமும் இடம்பெறும்.  கார்த்தி ஒருபோதும் ஹீரோவாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை. தனது திடமான நடிப்பால் ஆணி வேராக ஆழப் பதிகிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close