Kushboo Sundar B'day : நடிகை குஷ்பு இன்று தனது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரைக் குறித்த சின்ன ரீக்கெப் இதோ உங்கள் பார்வைக்கு..
Advertisment
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டினார்கள் என்றால் அது நம்ம சின்னதம்பி குஷ்புவிற்கு தான். குஷ்பு சினிமாவில் இருக்கும் போது அவரை கொண்டாட ரசிகர்களே இல்லை. தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த குஷ்பு, இன்று சினிமா, அரசியல், குடும்பம் என் அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
Kushboo Sundar B'day: குஷ்பு பிறந்த நாள்:
கொண்டையில் தாழம்பூ .. கூடையில் என்ன பூ குஷ்பூ என்று ரஜினியுடன் குஷ்பூ ஆடிய பாடல் பட்டித் தொட்டியெல்லாம் பரவியது. ரஜினி, கமல், விஜயகாந்த்,பிரபு, கார்த்தி, சீரஞ்சிவி, என தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார்.
Advertisment
Advertisements
இதுஒரு பக்கம் என்றால், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியை பரிசாக பெற்றார். தற்போது அரசியலிலும் தனக்கான பாணியில் செயல்பட்டு வருபவர்.
1970ல் மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்புவை அரவணைத்து வாழ்க்கை கொடுத்தது தமிழ் சினிமா . சினிமாவிற்கு வந்த காலங்களில் தமிழில் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து தமிழை சரளமாக பேசக்கற்றுக் கொண்டார்.
அதன் பின்பு இயக்குனர் சுந்தர் சி வை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டின் மருமகளாகவே மாறினார். உடையில் தொடங்கி பேசும் விதம் வரை குஷ்புவிடம் இருக்கும் நேர்த்தி எப்போதுமே தனித்துவமானது.
சில வருடங்கள் முன்பு பெண்கள் குறித்து ஆபசமான கருத்தைக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். குஷ்புவின் குடும்பம் ரொம்ப அழகானது. இரண்டும் பெண் குழந்தைகள். குடும்பம், அரசியல், சினிமா என வெற்றிக்கொடிகளை கட்டிக் கொண்டிருக்கும் குஷ்புவிற்கு தற்போது 48 வயது.
இப்போதும் இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் குஷ்புவின் ஸ்பெஷல் வீடியோக்கள் இதோ..
1. ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்புவின் ப்ளூப்பர்ஸ் வீடியோ
நன்றி : ஜெயா டிவி
2. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவின் அசத்தம் நடனம்