Advertisment

HDB Rajinikanth : 72-வது பிறந்த நாள்... ரஜினிகாந்த் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்

1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் ரஜினிகாந்த். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

author-image
WebDesk
New Update
Rajinikanth Fans

பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரஜினிகாந்த்

பேருந்து நடத்துனராகப் பணியாற்றிய ரஜினிகாந்த் என்ற இளைஞன் ஒரு நாள் இந்திய மக்களால் போற்றப்படும் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஆவான் என்பது யாருக்குத் தெரியும்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உண்மைகள் மூலம் நடிகரின் உற்சாகமூட்டும் கடந்த கால கதையை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Happy birthday, Rajinikanth: 10 facts on the superstar to share with kids

டிசம்பர் 12, 1950 இல் கர்நாடகாவில் பிறந்த ரஜினிகாந்த், தனது மராத்தி பெற்றோரான ஜிஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் ஆகியோருக்கு நான்காவது குழந்தை. மிக இளம் வயதிலேயே தாயை இழந்தவர்.

சூப்பர் ஸ்டாரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.

தனது பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, கூலி, தச்சர் மற்றும் பின்னர் ஒரு பேருந்து நடத்துனர் போன்ற பல வேலைகளை செய்தார் ரஜினிகாந்த்.

அந்த நேரத்தில், புதிதாக நிறுவப்பட்ட மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மூலம் திரைப்பட நடிப்பு பயிற்சி குறித்து ஒரு விளம்பரத்தை பார்த்த ரஜினிகாந்த் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, அந்த கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் திரைப்பட தயாரிப்பாளர் கே பாலச்சந்தரை சந்தித்தபோது அவர் தமிழ் கற்க அறிவுறுத்தியபோது ரஜினிகாந்த் உடனே ஒப்புக்கொண்டார்.

1975-ம் ஆண்டு வெளியான கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) என்ற தமிழ்த் திரைப்படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிப் படங்களை வெளியிட்டு, நாடு அறிந்த மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக மாற ரஜினிகாந்துக்கு வழி கிடைத்தது.

ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பானிய மொழியில் முடு: ஓடொரு மகாராஜா என மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ஆனது, இந்த படம் நாட்டில் ரஜினிகாந்துக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

பேருந்து நடத்துனர் முதல் சூப்பர் ஸ்டார் வரை என்ற பாடத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் ஒரு நடிகர் மட்டுமல்ல, சமூக இயக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். உதாரணமாக, 2002 ஆம் ஆண்டில், தமிழகத்திற்கு காவேரி தண்ணீரைத் திறக்காத கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து அவர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். 2011ல் அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார்.

ரஜினிகாந்துக்கு முறையே 2000 மற்றும் 2016 இல் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.

ரஜினிகாந்தை ஒரு தந்தையாகப் பற்றி பேசுகையில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒருமுறை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசும்போது எங்கள் அப்பா யார் என்பதை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை, ஏனென்றால் அவர் வீட்டிற்கு வந்ததும் மற்ற மனிதனைப் போலவும் எளிமையாகவும் உண்மையானவராகவும் இருந்தார். என் தந்தை சூப்பர்ஸ்டார் என்ற ஆரவாரத்துடன் வரவில்லை என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment