ரஜினிகாந்த் 73வது பிறந்த நாள்: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

"அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Happy Birthday Rajinikanth Leaders and celebrities wishes Tamil News

#HBDRajinikanth என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது

Rajini Kanth | Tamil Cinema News: தமிழ் திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Advertisment

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றி படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பதிவில், "இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு. ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

திரைப் பிரபலங்கள் வாழ்த்து

"அருமை நண்பர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து. இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்" என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

'பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா' என்று நடிகரும், ரஜினியின் மருமகமுமான தனுஷ் பதிவிட்டுள்ளார். 

"என் அன்பான ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் கருணை மற்றும் பணிவின் உண்மையான உருவகமாக, இன்னும் பல ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டுகள் வரவுள்ளன." என்று மலையாளம் நடிகர் மோகன்லால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

"பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பான ரஜினிகாந்த்! இனிவரும் ஆண்டு வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். எப்போதும் போல் ஆரோக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள்." என்று மலையாளம் நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

"ஒரே ஒரு தலைவருக்கு வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் சார், பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் கவர்ச்சி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்." என்று தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து பதிவிட்டுள்ளார். 

ரசிகர்கள் வாழ்த்து மழை

இன்று காலை முதலே #HBDRajinikanth என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Rajini Kanth Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: