சமந்தா. கல்யாணம் ஆன பின்பும், தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு மவுசு குறையவில்லை. ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கை மறு பக்கம் சினிமா என்று ரொம்பவே பிஸியாக இருக்கும் சமந்தா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
எப்படி இருந்த சமந்தா இப்படி ஆயிட்டாரேனு அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களும் அவரை பார்த்து பொறாமை பட்ட தருணங்கள் பலவுண்டு. இந்த சின்ன வயசில இப்படி ஒரு அசுர வளர்ச்சிக்கு காரணம் சமந்தாவின் ஸ்ட்ரான்ங் டெடிக்கெஷன் தான். திருமணத்திற்கு பிறகும் குடும்பத்தாரின் ஆதரவோடு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் தமிழில் மூன்று படங்கள் காத்திருக்கிறது. அதே போல், அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அதை தவிர கடை திறப்பு, நகைக்கடை விளம்பரம், அப்படி இப்படினு இப்ப வரைக்கு அவரை தயாரிப்பாளர்கள் வட்டம் போட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதற்கிடையில், சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் காமன் டிஸ்பிளே பிக்சர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தான் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/CAR-70-300x169.jpg)
'லெட்ஸ் டேக் செல்பி புள்ள’ என்று தளபதியுடம் ஆடி யாருப்ப இந்த பொண்ணுனு எல்லாரையும் கேட்க வைத்த சமந்தா அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை. மாஸ்கோவின் காவிரியில் தொடங்கிய திரைப்பயணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது விரைவில் வெளிவர காத்திருக்கும் இரும்புத்திரை வரை வந்து நின்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/CAR-71-300x197.jpg)
சென்னை பல்லாவரம் தான் சமந்தாவின் வீடு. பக்க சென்னை பொண்ணு, ஸ்கூல், காலேஜ் ஃப்ரண்ட்ஸ் கூட கலாட்டா , வாரந்தோறும் பெற்றோர்களுடன் சர்ச் செல்வது என ரொம்பவே சிம்பிளா இருந்த சமந்தா, பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்தார். அதன் பின்பு எளிதில் மறக்க முடியாத அவரின் முகத்தை பார்த்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர் இயக்கிய மாஸ்கோவின் காவிரி படத்தில் சமந்தாவை நாயகி ஆக்கினார்.
அதன் பின்பு தமிழில் விஜய்யுடன் கத்தி, தெறி, சூர்யாவுடன் அஞ்சான், 24, விக்ரமுடன் பத்து பத்து என்றதுக்குள்ள, தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி, நாகசைதன்யா, ஜீனியர் எம்டிஆர் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். அடுத்தடுத்த படவாய்ப்புக்கள் குவிந்த நேரத்தில் தான் நாகசைதன்யா காதலித்து கரம் பிடித்து ஆந்திரா மருமகள் ஆனார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Donald-Trump-1-6-300x225.jpg)
இருந்தப்போது தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் சமந்தாவிற்கு, சினிமா இண்டஸ்டில் பெஸ்ட் ஃப்ரண்ட் காஜல் அகர்வால் தானாம். கடைத் திறப்பு விழா மூலம் வரும் பணம் முழுவதையும் தன் ‘பிரத்யுஷா டிரஸ்ட்’டுக்குக் கொடுத்துவிடுவது இவரின் வழக்கம். அந்த அமைப்பின் மூலம் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சமந்தா உதவியும் செய்து வருகிறார். ரோன்டா பைரன் எழுதிய சீக்ரெட் புத்தகம் சமந்தாவின் ஆல் டைம் ஃபேவரைட். இதையெல்லாம் தாண்டி சமந்தா ஒரு அசைவ பிரியை. மீன் வகைகளை ஒரு புடி புடிப்பாராம்.