Advertisment

Happy Birthday Samantha: நித்யா, மித்ரா, வேம்பு இவங்கள எல்லாம் மறக்க முடியுமா? - சமந்தா பிறந்தநாள்!

Happy Birthday Samantha: தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் முக்கியத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha parkour act

Samantha Ruth Prabhu

Happy Birthday Samantha: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா.

Advertisment

அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா தன்னை பல்லாவரத்து தமிழ் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறைக்குள் நுழைந்து நிறைய விளம்பரங்களிலும் நடித்தார்.

பிறகு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இயக்கிய ‘மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார்.

’விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் நந்தினி என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் தெலுங்கு வெர்ஷனான ’ஏ மாயா சேசவே’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதில் ஹீரோவாக நடித்தவர் நாக சைத்தன்யா.

Happy Birthday Samanatha

பின்னர் ’நீ தானே என் பொன்வசந்தம்’, ’அஞ்சான்’, ‘கத்தி’, ‘தெறி’, ‘24’, ‘மெர்சல்’, ’இரும்புத்திரை’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என முக்கியப் படங்களில் நடித்தார்.

அதே வேளையில் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் முக்கியத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நாக சைத்தயாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் திருமணமும் செய்துக் கொண்டார். பொதுவாக திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் முடங்கிவிடும் வேளையில், முன்பைவிட நிறையப் படங்களில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சமந்தா.

இன்று அவர் தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்!

Tamil Cinema Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment