scorecardresearch

இசைத் தோழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்… ஜிப்ஸி அப்டேட்டுடன் ராஜூமுருகன் வாழ்த்து!

தனித்துவமான இசையமைப்பால் அனைவரையும் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே இயக்குநர் ராஜூமுருகனுடன் குக்கூ படத்தில் இணைந்து பணியாற்றினார். 

இசைத் தோழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்… ஜிப்ஸி அப்டேட்டுடன் ராஜூமுருகன் வாழ்த்து!

Happy Birthday Santhosh Narayanan : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று 36வது பிறந்தநாள்.  2012ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இசைக்கலைஞன் சந்தோஷ் நாராயணன். பீட்சா, சூது கவ்வும், குக்கூ, மெட்ராஸ், இறுதிச் சுற்று, பரியேறும் பெருமாள், காலா, கபாலி, வடசென்னை போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

அட்டக்கத்தி துவங்கி வடசென்னை வரை தன்னுடைய தனித்துவமான இசையமைப்பால் அனைவரையும் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே இயக்குநர் ராஜூமுருகனுடன் குக்கூ படத்தில் இணைந்து பணியாற்றினார்.

தற்போது நடிகர் ஜீவாவின் நடிப்பில் உருவாகி வரும் ஜிப்ஸி படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளர். படத்திற்கான முக்கியமான அப்டேட்டினை ராஜூமுருகன் சந்தோஷ் நாராயணின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு வாழ்த்துகளையும் அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Happy Birthday Santhosh Narayanan – ராஜூ முருகன் வாழ்த்து

தன்னுடைய முகநூலில் இசைத்தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மே 20ம் தேதி வெளியாகிறது என்பது தான் ஜிப்ஸியின் அடுத்த அப்டேட்.

 

மேலும் படிக்க : நெகட்டிவ் விமர்சனம் இல்லாத ‘ஜிப்ஸி’ டீசர்! ஜீவாவுக்கு பிரேக் கொடுக்குமா?

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Happy birthday santhosh narayanan director raju murugan wished him with gypsy updates