Happy Birthday SPB: முறையாக சங்கீதம் கற்காத பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையிசைக்கு அளவில்லா அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளார்.
Advertisment
1966-ல் தொடங்கிய அவரது திரை வாழ்க்கை இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அவருக்கு நிகர் அவர் தான் எனும் அளவுக்கு, தனித் தன்மையைக் கொண்டிருக்கிறார்.
ஆனால் எஸ்.பி.பி-யைப் போல் பெரும்பாலான பாடகர்கள் திரையிலும் ஜொலிக்கவில்லை. அவரது குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடமிருந்து நிறைய அன்பைப் பெற்றிருக்கிறார்.
தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
Advertisment
Advertisements
கேளடி கண்மணி (1990)
இயக்குநர் பாலச்சந்தரிடம் அசிஸ்டெண்டாக இருந்த வசந்திடம், தன்னை வைத்து முதல் படம் படம் இயக்க வேண்டாம் என எவ்வளவோ கேட்டுக் கொண்டார் எஸ்.பி.பி. ஒருவேளை அந்தப் படம் தோல்வியடைந்தால், தன்னிடம் இழக்க ஏதுமில்லை எனவும், ஆனால் இளம் இயக்குநராகிய வசந்துக்கு அது பெரும் வடுவாகவும், தடையாகவும் மாறி விடும் என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது.
ஆனால் வசந்த் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மனைவியை இழந்த எஸ்.பி.பி பாடும் திறமையுள்ளவராக அந்தப் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி திரையரங்குகளில் 285 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்டன. மூச்சு விடாமல் எஸ்.பி.பி. பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
திருடா திருடா (1993)
சிபிஐ அதிகாரி லக்ஷ்மி நாராயணனை யாரால் மறக்க முடியும்? அவரது ஸ்கிரீன் பிரசென்ஸும், இயல்பான நகைச்சுவையும், மணிரத்னமின் இந்தப் படத்திற்கு வலு சேர்த்தன. எஸ்.பி.பி-யின் சிறந்த பெர்பாமென்ஸ்களில் இதுவும் ஒன்று.
காதலன் (1994)
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனை என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்திற்குப் பிறகு ஹீரோவின் அப்பாவாக நடிக்க அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அவற்றில் சிலவற்றை அவர் டிக் செய்தார். இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ஈஸி கோயிங் போலீஸ் கான்ஸ்டபிளாகவும், ஃப்ரெண்ட்லியான அப்பாவாகவும் எஸ்.பி.பி நடித்திருந்தார். 90-களின் முற்பகுதியில் இந்தப் படம் சிறந்த தந்தைக்கான உதாரணமாக பார்க்கப்பட்டது.
உல்லாசம் (1996)
ஒரு சின்ன மாறுதலோடு மீண்டும் தந்தையாக எஸ்.பி.பி நடித்திருந்தப் படம் இது. இதில் கதிரேசன் போல வார்ம் அண்ட் சார்மிங்காக அவர் இல்லை. ஆனால் தனது மோசமான மகனின் எதிர்காலத்தைக் குறித்து, தூக்கமிழந்து தவிக்கும் அப்பாவாக நடித்திருந்தார்.