Happy Birthday Ajith: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பின்னணியில்லாத குடும்பத்திலிருந்து வந்து, கரடு முரடான பாதைகளில் பயணித்து, இன்று வெற்றி சிகரத்தை அடைந்திருக்கும் அஜித், இன்று பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். இந்நிலையில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையே மற்ற திரைப்பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை நடிகர் அஜித்துக்கு தெரிவித்து வருகிறார்கள்.
ஆசிர்வாதத்துடன் இருங்கள் என நடிகை காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்தியுள்ளார்.
ஸ்கிரீன் பிரசென்ஸால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகள் என, நடிகர் ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத்.
திரைப் பின்னணி இல்லாமல் வந்து, இன்று உயர்ந்திருக்கும் நீங்கள் என்னைப் போன்றோருக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷின் வாழ்த்து செய்தி.
‘வில்லன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கிரணின் வாழ்த்து.
நடிகை ராய் லட்சுமி அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”