Happy Birthday Thalapathy Vijay: நடிகர் விஜய் நாளை தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கிறார்கள். பல்வேறு ஹேஷ் டேக்குகளை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், இன்று மாலை வெளியாகும் ’தளபதி 63’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக காத்திருக்கிறார்கள். ’வெறி’, ‘அதிபதி’ என இவற்றில் ஏதேனும் ஒன்று தான் தளபதி 63 பட டைட்டிலாக இருக்கக் கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இணைந்துள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில்,
Listening to morning Radio and discovered that #ThalapathyBirthday and Chennai rains are directly proportional to each other. Advance birthday wishes to Actor Vijay and best wishes to Chennai rains over the weekend.
— Ashwin Ravichandran (@ashwinravi99) 21 June 2019
“காலையில் ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போது ‘தளபதி பிறந்தநாள்’, சென்னை மழை எல்லாமே சரியான விகிதத்தில் ஒன்றிணைந்திருப்பதை கண்டுபிடித்தேன். நடிகர் விஜய் அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வார இறுதியை மகிழ்விக்க வந்திருக்கும் சென்னை மழைக்கு சிறப்பான வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள், ‘அட நம்ம அஸ்வினும் தளபதி ஃபேனா?’ என்ற ஆனந்தத்தில், அதனை ரீ ட்வீட் செய்து வருகிறார்கள்.