விஜய் பிறந்தநாள்: வெற்றிக்கு குடும்ப பலம் மிக முக்கியம்!

விஜய்யிடம், ”சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிற?” எனக் கேட்டாராம் சந்திரசேகர்.

By: Updated: June 22, 2020, 03:45:46 PM

Thalapathy Vijay: தனது கடின உழைப்பால், தனித்துவ திறமையால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார் தளபதி விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரையும் தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்திருக்கிறார். இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய்க்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஓ… இதனால தான் லவ் பிரேக் அப் ஆகுதா?

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபலமான இயக்குநர், அம்மா ஷோபா பின்னணி பாடகி. இப்படிப்பட்ட குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், தன்னுடைய பன்முக திறமையால் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய விஜய், 1992-ம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். 1996-ல் வெளியான ’பூவே உனக்காக’ திரைப்படம் விஜய்க்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் அவரை ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படி மாற்றியது. இதன் பிறகு தான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்ந்தெடுப்பதில், மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதன் மூலம் அவரது ரசிகர்களும் பெருகத் தொடங்கினர்.

Thalapathy Vijay, Happy Birthday Vijay, Vijay Family விஜய்யின் க்யூட் மொமெண்டுகள்

அப்படி விஜய்யின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, அவரை நேரில் சந்திக்க லண்டனில் இருந்து சென்னைக்கு பறந்து வந்தார் ரசிகை சங்கீதா. அப்போதெல்லாம், அடிக்கடி ரசிகர்கள் விஜய் வீட்டிற்கு சென்று அவரை சந்திப்பார்கள். அப்படி ஒருநாள் தனது குடும்பத்துடன் அவர் வீட்டிற்கு வந்தார் சங்கீதா. சில நாட்கள் கழிந்த பின்னர், விஜய்யிடம், ”சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிற?” எனக் கேட்டாராம் சந்திரசேகர். “நல்ல பொண்ணு, நல்ல குடும்பம்” என பதிலளித்திருக்கிறார் விஜய். உடனே சங்கீதாவை, உனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறோம் என்றாராம், அவரது பெற்றோர்கள். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு உடன்படுகிறேன், என விஜய் கூறியதையடுத்து, லண்டன் பறந்து சென்று திருமணத்தை நிச்சயித்திருக்கிறார்கள் விஜய் குடும்பத்தினர். தொடர்ந்து 1999-ம் ஆண்டு சங்கீதாவை கரம் பிடித்தார் விஜய்.

தளபதி விஜய் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துகளால் திணறும் ட்விட்டர்!

இவர்களுக்கு ஜேஸன் சஞ்சய், திவ்யா ஷாஷா என மகனும், மகளும் உள்ளனர். லண்டனில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து வருகிறார் சஞ்சய். சென்னையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வரும் திவ்யா, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். ’வேட்டைக்காரன்’ படத்தில் சஞ்சய்யும், ‘தெறி’ படத்தில் திவ்யாவும் அப்பா விஜய்யுடன் திரையில் தோன்றியிருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு நிகழ்வு, திருமணம் போன்ற விழாக்களில் மனைவி விஜய்யுடன் கலந்துக் கொள்கிறார் விஜய். கூட்டத்தில் மனைவியை பாதுகாப்பாக கூட்டிச் செல்லும் பாங்கு, பலராலும் ரசிக்கப்படுகிறது. விஜய் மட்டுமல்ல, விஜய் சமபந்தமான கடுகளவு விஷயமும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு, இணையத்தில் படு வேகமாக வைரலாவது வழக்கம். அந்தளவுக்கு விஜய் மீது அன்பு செலுத்துகிறார்கள் ரசிகர்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Happy birthday thalapathy vijay family sangeetha sanjay divya sha sha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X