தளபதி விஜய் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துகளால் திணறும் ட்விட்டர்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

Happy Birthday Thalapathy Vijay, VIjay Birthday
Happy Birthday Thalapathy Vijay, VIjay Birthday

Thalapathy Vijay: நடிப்பு, நடனம், பாடல், காமெடி, ஆக்‌ஷன், டயலாக் டெலிவரி என ஒரு நடிகருக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் மிளிர்கிறார் நடிகர் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநர், அம்மா ஷோபா பின்னணி பாடகி என ஓர் கலைக்குடும்பத்திலிருந்து வந்த வாரிசு. ஆனால், பெற்றோர் எனும் மர நிழலில் நாட்களைக் கடத்தாமல், தனது கடின உழைப்பாலும், தோல்விகள் பலவற்றைக் கண்டும் கைவிடாத தன்னம்பிக்கையாலும் இன்று மாபெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார்.

சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய். நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தெறிக்க விடுகிறார். பொதுவாக எல்லாருக்கும் ஒவ்வொரு வயதாகும் போதும் முதிர்ச்சி தெறியும். மாறாக, விஜய்க்கோ ஒவ்வொரு பிறந்தநாளிலும் வயது குறைந்து, இளமை கூடுகிறது. இவரின் வயதிலிருக்கும் மற்றவர்களைப் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். அந்தளவுக்கு மோஸ்ட் சார்மிங் ஆக்டராக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalapathy vijay birthday celebrities wishes master trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express