Happy Birthday Trisha: தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் முன்னணி நடிகையாக இருக்கும் வாய்ப்பு இனி வருபவர்களுக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
2002-ல் ’மெளனம் பேசியதே’ திரைப்படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 17 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும், பெரும்பாலான நடிகைகளைப் போல திரை வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்க ஒரு போதும் விரும்பாதவர்.
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ’96’ படத்தைப் பார்த்து விட்டு, ’ஜானு ஜானு’வென உருகாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஃபீல்டுக்கு வந்த புது நடிகையைப் போல் தன் மேல் இருக்கும் கிரேஸ் குறையாதவாறு பார்த்துக் கொள்வதில் இவருக்கு நிகர் யாருமில்லை.
சரி த்ரிஷா பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்துக் கொள்வோமா?
/tamil-ie/media/media_files/uploads/2019/05/MV5BODEyZDJkMTItM2Y2My00OWI1LTk0ZTQtMjQ0ODg1OTUwYjVjXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@._V1_.jpg)
இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், த்ரிஷாவுக்கு கிறிஸ்தவமும் ரொம்ப பிடித்தமான ஒன்று. காரணம் அவர் படித்த ‘சேக்ரட் ஹார்ட்’ பள்ளி.
படித்து முடித்து தான் ஒரு ‘கிரிமினல் சைக்காலஜிஸ்ட்’ ஆக வேண்டும் என்பது தான் த்ரிஷாவின் லட்சியமாக இருந்தது.
2001-ல் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில், ‘பியூட்டிஃபுல் ஸ்மைல்’ விருது வாங்கினார். இவற்றுடன் ’மிஸ் சென்னை, மிஸ் சேலம்’ ஆகிய போட்டிகளையும் வென்றுள்ளார்.
நன்றாக நடனம் ஆடுவார். ஆனால் ஆடுவதென்றால் த்ரிஷாவுக்குப் பிடிக்காது. நீச்சல் என்றால், குளத்து மீனைப் போல் 24 மணி நேரமும் கூட தண்ணீருக்குள்ளேயே இருப்பார். அந்தளவுக்கு நீச்சல் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/3a5efaf83ce354fd59d88f5a6dc8e959.jpg)
பிரபல பாடகி ஃபல்குனி பதாக்கின், “மேரி சுனர் உத் உத் ஜாயே” என்ற மியூஸிக் வீடியோ தான் இவரை முதன் முதலில் நடிகையாக்கியது.
விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த த்ரிஷாவுக்கு, சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் பல மடங்கு இருந்தது. அதுவும் சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நிறைவேறிவிட்டது.
ரசிகர்களால் கொண்டாடப்படுவதும், ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவதும் த்ரிஷாவுக்கு வாடிக்கையான ஒன்று.
நாய்குட்டிகள் என்றால் கொள்ளை பிரியம்.
நெருக்கமான தோழியைப் போல் அம்மா உமா கிருஷ்ணனிடன் தன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வார்.
உணவுப் பிரியரான த்ரிஷா உணர்ச்சி வசப்பட்டால் மட்டும் அழுது விடும் குணமுடையவர்!