Advertisment

HBD Vadivelu : வைகைப்புயல் நடித்த காமெடி அல்லாத சில கேரக்டர்கள் பற்றிய ஒரு அலசல்

மாமன்னன் படம் வெளியானதில் இருந்தே, நகைச்சுவைக்கு அப்பாற்பட்ட வடிவேலுவின் நடிப்புத்திறன் பற்றி நிறைய பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளன.

author-image
WebDesk
New Update
Vadivelu

வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக வடிவேலுக்கு முக்கிய இடம் உண்டு. துணை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பின்னாளில் தனது திறமையின் மூலம் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவின் வித்தியாசமான காமெடி அல்லாத நடிப்பை வெளிப்படுத்தியது என்று சொல்லலாம். மாமன்னன் படம் வெளியானதில் இருந்தே, நகைச்சுவைக்கு அப்பாற்பட்ட வடிவேலுவின் நடிப்புத்திறன் பற்றி நிறைய பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், நடிகர் தனது முந்தைய படங்களில் கூட தன்னை ஒரு பாராட்டத்தக்க நடிகராக நிரூபித்துள்ளார்.

அதே சமயம் மாமன்னன் படம் வெளியான பிறகு ஒரு திறமையான நடிகனை தமிழ் சினிமா பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த மாதிரியான கருத்துக்ககள் கொஞ்சம் சிக்கல் நிறைந்தவை என்றாலும், இந்த கருத்துக்கள் நகைச்சுவை படங்களை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு செயலுக்கு வழிவகுக்கும். நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்ற கமல்ஹாசன் உட்பட பல நடிகர்கள் நகைச்சுவை ஒரு பெரிய வணிகம் என்று கூறியுள்ளனர். அதேபோல் வடிவேலுவும் தனது சினிமா அறிமுகத்தில் இருந்து வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுவே அவரது நடிப்புத் திறமைக்கு சான்று.

ஒரு சிறந்த நடிகரின் இந்த வரையறையின்படி, வடிவேலு தனது நடிப்புத் திறனை நீண்ட காலத்திற்கு முன்பே நிரூபித்துள்ளார். சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் பலரின் விருப்ப படமாக உள்ளது. நகைச்சுவை நடிகரான வடிவேலு, தனது சினிமா பயணத்தில் எப்போதாவது நகைச்சுவை இல்லாத கேரக்டர்களில் நடித்திருக்கிறார். காமெடி ஜாம்பவான் கவுண்டமணி கூட வில்லனாக முயற்சி செய்திருந்தாலும், வைகைப் புயல் தனது கோட்டையில் தான் சுற்றிக்கொண்டிருந்தார். நடுவில் அவர் ஹீரோவாக தனது அடியை எடுத்து வைத்திருந்தாலும், அதில் சீரியஸ் நாயகனாக இல்லாமல் காமெடியாகவே வந்திருப்பார்.

அதே சமயம் மாமன்னனுக்கு முன்பே, வடிவேலு எப்படி சில அபாரமான காட்சிகளை நகைச்சுவை இல்லாத கேரக்டரில் நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி:

கோழை மற்றும் கொடூரமான அரசர் புலிகேசி 23-ம் புலிகேசி அவரது சிரிப்பான நடத்தை, குழந்தைத்தனம் மற்றும் அறியாமை ஆகியவற்றால் அனைவராலும் நினைவுகூரப்பட்டாலும், உக்ரபுத்தனின் கட்டுப்பாடான மற்றும் எப்போதும் தீவிரமான ஆளுமையை மக்கள் நினைவில் கொள்வது அரிது. நையாண்டி கால நாடகத்தில் வடிவேலு இரு வேடங்களிலும் நடித்தாலும், கதாபாத்திரங்களுக்கு இடையே நம்பமுடியாத வேறுபாட்டை காட்டியிருப்பார். இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையில் உடல் மொழி மாற்றம் தெளிவாக இருந்தது இயக்குனர் சிம்பு தேவனுக்கு விஷயங்களை எளிதாக்கியது,

உக்ரபுதன் புலிகேசியின் இடத்திற்கு வந்தவுடன், செங்கோலுக்குள் மறைந்திருக்கும் வாளைப் பார்த்து, அது என்ன என்று ஆச்சரியப்படுவார். இந்த காட்சி நுட்பமானது, ஆனால் இதில் கதாபாத்திரத்தில் வெளிப்படையான மாற்றத்தை காணலாம், இது வடிவேலு எப்போதும் ஒரு சிறந்த நடிகராக இருப்பதை நிரூபிக்கிறது.

தேவர் மகன்:

வடிவேலு பெரிய தேவர் (சிவாஜி) இறக்கும் காட்சியில் எப்படி அனைவரையும் கவர விரும்பினார் என்பது குறித்தும், அந்த கதாபாத்திரம் குறித்தும் பலமுறை விரிவாகப் பேசியுள்ளார். வடிவேலுவும் மற்றொரு நடிகர் சங்கிலி முருகனும் தங்கள் நடிப்பால் மிகைப்படுத்தப்பட்டதைக் கண்டு, சிவாஜியே அந்த காட்சிகளை குறைக்கச் சொன்னதாக வடிவேலுவே கூறியுள்ளார். காட்சியில் வடிவேலுவை அதிகம் பார்க்க முடியாவிட்டாலும், தேவர் மகனின் உலகில் எசக்கி (வடிவேல்) ஒரு அற்புதமான கேரக்டர். சண்டையில் கையை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காட்சியே அதற்கு சிறந்த உதாரணம். சண்டைக்குக் காரணமானவன் என்ற குற்றவுணர்வோடு எசக்கியைப் பார்க்க வருகிறான் சக்திவேல் (கமல்ஹாசன்). அந்தக் காட்சியில் வடிவேலு அரை மயக்கத்தில் வலியால் அவதிப்படுகிறார். கையை இழந்ததற்காக வருத்தப்படாத எசக்கி, "என்னால் ஒரு கையால் கார் ஓட்ட முடியும். ஆனால் சாப்பிடும் கையால் கழுவ வேண்டும் என்று சொல்வார்.

எம்.மகன்:

வடிவேலுவின் நடிப்பில் அனைவருக்கும் பிடித்தது. திருமலையின் (நாசர்) மைத்துனரான கருப்பட்டி அய்யாகண்ணு (வடிவேலு). ஒரு பழமைவாத மற்றும் தவறான தந்தை, கீழ்ப்படிதல் என்ற பெயரில் தனது மகனை சித்திரவதை செய்யும் பாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார். திருமலையுடன் பணிபுரியும் அய்யாக்கண்ணுவும் அதே சிக்கலை எதிர்கொள்கிறார், ஆனால் அவர் தனது சகோதரி மற்றும் மருமகன் கிருஷ்ணா (பரத்) ஆகியோருக்காக அனைத்தையும் பொருத்துக்கொள்கிறார். குடும்பத்தினர் அனைவரும் திருமலைக்கு எழுந்து நிற்க பயப்படும் நிலையில், அய்யாக்கண்ணு மட்டும் அவ்வப்போது குறைகளை கூறிக்கொண்டே இருப்பார்.

வடிவேலு ஒரு மாமாவுக்கும் அவரது மருமகனுக்கும் இடையிலான பிணைப்பின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார், இது தமிழ்நாட்டின் கலாச்சார விஷயம். குடும்ப நாடகத்தில் நகைச்சுவை நடிகராகவும், நம்பமுடியாத துணை நடிகராகவும் ஒரு சிறந்த சமநிலையை உருவாக்குகிறார். வடிவேலுவை உண்மையான உணர்ச்சிகளுடன் நிஜமாகக் காட்டுவதால் அய்யாகண்ணு ஒரு கேரக்டர் என்பதை விட படத்தில் ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம்.

இத்தனை வருடங்கள் கவனிக்கப்படாமல் போன வடிவேலுவின் இந்த அபாரமான திறனை மாரி செல்வராஜ் தனது மாமன்னன் படத்தின் மூலம் தட்டிச் சென்றுள்ளார். சமீப காலமாக வடிவேலுவால் காமெடி நடிகராக மீண்டு வர முடியாத நிலையில் (முக்கியமாக தற்போதைய  படங்களில் இருந்து நகைச்சுவை படங்கள் அழிந்து வருவதால்), இந்த கவனிக்கப்படாத சாத்தியம் மாமன்னன் மூலம் முன்னுக்கு வந்துள்ளது. வடிவேலுவுக்கு இது புதிய பரிமாணம் அல்ல. ஏனென்றால் இத்தனை காலம் இந்த திறன் அவருடன் தான் இருந்தது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வடிவேலு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vadivelu Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment