Happy Hug Day 2019 Importance: பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கிய காதலர் தின கொண்டாட்ட வாரம் காதலர் தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தில் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மிக முக்கியமான நாள் தான் இந்த ‘ஹக் டே’. பிப்ரவரி 12-ம் தேதி கொண்டாடப்படும் இந்த தினம் அன்பை வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உங்கள் அன்புக்குரியோருக்கு நீங்கள் கொடுக்கும் அணைப்பு, நீங்கள் அவர் மேல் எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு மிகச்சிறந்த வழி. அசதியான வேலை பளுவிற்குப் பிறகு, வீடு திரும்பும் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைத் துணை தரும் இறுக்கமான அனைப்பு உடனடியாக உங்களின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும். இந்த அணைப்பு நேச்சுரல் ஸ்ட்ரெஸ் ரிலீஃபாக இருப்பதோடு, நல்வாழ்வுக்குத் தேவையான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
முக்கியத்துவம்
அன்பு, மகிழ்ச்சி, காதல் ஏன் கோபத்தைக் கூட உங்களது அணைப்பால் உணர்த்தலாம். அணைக்கும் போது சுரக்கும் ‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன் தனிமை, விரக்தி, கோபம் உள்ளிட்ட பலவற்றிற்கு அருமருந்தாகும்.

கட்டியணைக்கும் போது உங்களது சருமம் க்ளோவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதோடு அணைத்தல், வயதான தோற்றத்தை வராமல் தள்ளிப் போடுவதாக கலிஃபோர்னியா மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அதோடு மன வலிமையை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது இந்த ‘ஹக்’