'நான் பாத்து வியந்த விஜய்ண்ணா கூட தளபதி 63-ல நடிக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’ - நடிகர் கதிர்

உங்கள மாதிரி தான் நானும் காலேஜ் படிக்கும் போதே விஜய் அண்ணாவ பாத்து ரொம்ப எக்ஸைட் ஆகியிருக்கேன். இப்போ அவர் கூடவே ஸ்கிரீன்ன ஷேர் பண்றது, ரொம்ப சந்தோசமா இருக்கு.

உங்கள மாதிரி தான் நானும் காலேஜ் படிக்கும் போதே விஜய் அண்ணாவ பாத்து ரொம்ப எக்ஸைட் ஆகியிருக்கேன். இப்போ அவர் கூடவே ஸ்கிரீன்ன ஷேர் பண்றது, ரொம்ப சந்தோசமா இருக்கு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Kathir's Viral video

’கிருமி, விக்ரம் வேதா’ என கதைகளை தேர்வு செய்து நடித்த நடிகர் கதிருக்கு, கடந்த வருடம் வெளியான ’பரியேறும் பெருமாள்’ அதிக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

Advertisment

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். சமூகத்தில் வேரோடிக் கிடக்கும் சாதிய கொடுமைகளை பொதுவெளியில் உரக்கக் கூறிய அந்தப் படத்தையும், கதிரின் நடிப்பையும் பலரும் பாராட்டியிருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து தற்போது, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கதிர். அதோடு இவரது ‘சத்ரு’ என்ற படமும் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில், தளபதி 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்ற செய்தியோடு, மற்ற தகவல்களையும் கதிர் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

“ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தளபதி 63-ல் விஜய்ண்ணாவோட பண்றேன். உங்கள மாதிரி தான் நானும் காலேஜ் படிக்கும் போதே விஜய் அண்ணாவ பாத்து ரொம்ப எக்ஸைட் ஆகியிருக்கேன். இப்போ அவர் கூடவே ஸ்கிரீன்ன ஷேர் பண்றது, ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க மனசுல விஜய்ண்ணாவ பத்தி நெனச்சா எப்படி இருக்குமோ, அப்படித்தான் எனக்கும். தளபதி 63 படம் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு, தீபாவளிக்கு வர்றோம்” என அவர் பேசிய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்!

 

Actor Vijay Kathir Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: