விக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்!

Santhanam - Harbhajan singh: கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் பல பஞ்சாபி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் யுவராஜ் சிங். 

Vikram – Irfan Pathan: கிரிக்கெட்டும், சினிமாவும் ரசிகர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று. தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களை ஹீரோவாக நினைக்கும் வெறித்தனமான ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், உடல் ஒத்துழைக்கும் வரை விளையாடிவிட்டு, பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்று, பயிற்சியாளராகவோ அல்லது தங்களது சொந்தத் தொழிலிலோ கவனம் செலுத்துவார்கள். சில வீரர்கள் சினிமாவிலும் நடித்திருக்கிறார்கள். அதாவது, வானளாவிய சிக்ஸர்களின் மூலம், பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் சுனில் கவாஸ்கர், ”சவ்லி பிரேமாச்சி” என்ற மராத்தி படத்தில் நடித்திருக்கிறார். அதோடு 1988-ம் ஆண்டு நஸ்ருதீன் ஷா-வின் ”மலாமால்” படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, 90-களில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான அஜய் ஜடேஜாவும் திரையில் தோன்றியிருக்கிறார். 2003-ல் ‘கெல்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் அவர். இந்திய அணி முதன் முதலில் உலகக்கோப்பை வாங்கிய தருணத்தை நினைத்துப் பார்த்தால், கபில் தேவின் முகம் தானாக உங்கள் மனதில் தோன்றும். ”இக்பால், முஜ்ஷே ஷாதி கரோகி, ஸ்டம்ப்ட்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜும் ஒரு கிரிக்கெட் வீரர். அவர்  வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். 30-க்கும் மேற்பட்ட பஞ்சாபி மற்றும் 10 இந்தி படங்களில் நடித்துள்ளார் யோக்ராஜ். அதோடு கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் பல பஞ்சாபி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் யுவராஜ் சிங்.

இவ்வளவு ஏன், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது வரலாற்றுப் படத்தில் தானே நடித்தார். இந்நிலையில் இன்னும் இரண்டு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிக்க இருக்கிறார்கள். உடனே இந்தி படமா என நினைத்துவிட வேண்டாம். தமிழ் சினிமாவில், வெவ்வேறு படங்களில் நடிக்கிறார்கள் ஹர்பஜன் சிங்கும், இர்ஃபான் பதானும்!

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து பெயரிடப்படாத ”விக்ரம் 58” படத்திற்காக இணைந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது, இதன் படப்பிடிப்பு அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் பிரபல ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜய். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், 25 வெவ்வேறு கெட்அப்களில் விக்ரம் தோன்றுகிறாராம்.

இதற்கிடையே அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து இயக்கும் “டிக்கிலூனா”, படத்தின் ஷூட்டிங் இந்த நவம்பரில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் இந்தப் படம் குறித்த அற்புதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘டிக்கிலூனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் மேட்ச்களில் சென்னை அணிக்கு விளையாடி வரும் ஹர்பஜன், தமிழில் ட்வீட் போட்டு தமிழ் ரசிகர்களின் மனதில் ஏற்கனவே தனக்கென ஓரிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒரே நேரத்தில் இர்ஃபானும், ஹர்பஜனும் தமிழ் படங்களில் நடிக்கும் விஷயத்தால், திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள் கிரிக்கெட் ப்ளஸ் சினிமா ரசிகர்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close