‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?

Hari Nadar 2K Azhakanathu Kadhal : ஹரி நாடார் ஹீரோவாக நடிக்கும் 2கே அழகானது படத்தின் கதை என்ன என்ற கேள்வியால் கோபமடைந்த படத்தின் ஹீரோயின் வனிதா கூலாகி பிறகு சிரித்தபடி பதிலளித்துள்ளார்.

Hari Nadar Vanitha Vijayakumar New Movie Update : ஹரி நாடார் என்றாலே கிலோ கணக்கில் அவர் அணிந்திருக்கும் தங்க நகைகள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அவர் சுமார் 3.5 கிலோ தங்க நகைகளை எப்போதும் அணிந்திருக்கிறார். அதனால்தான், அவரை பலரும் நடமாடும் நகைக்கடை என்று கூறி வருகின்றனர்.

புதிதாக யார் வந்தாலும் வரவேற்கும் தமிழ் சினிமா துறை இப்போது ஹரி நாடாரையும் வரவேற்றுள்ளது. தமிழ் சினிமா துறைக்கு புது ஹீரோவாக அறிமுக நாயகனாக அடியெடுத்து வைத்திருக்கிற ஹரிநாடார், இயக்குனர் முத்தமிழ் வர்மா இயக்கத்தில் 2கே அழகானது காதல் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹரி நாடாரே தயாரிக்கிறார்.

ஹரி நாடார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் யார் கதநாயகி என்ற எதிர்பார்ப்பு சமூக ஊடகங்களில் சினிமா ரசிகர்கள் இடையே எழுந்தது. ஹரி நாடார் நடிக்கும் 2கே அழகானது காதல் படத்தின் கதை என்ன என்ற பேச்சுகளும் எழுந்தது. இந்த சூழலில்தான் ஹரிநாடார் படத்தில் ஹீரோயினாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹரி நாடார் – வனிதா நடிக்கும் 2கே அழகானது காதல் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பட பூஜையில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் முத்தமிழ் வர்மா நடிகை வனிதாவிடம் கதை கூற கதை பிடித்துப் போன வனிதா ஹரி நாடார் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். அப்போது, இந்த படம் கள்ளக்காதல் தவறு இல்லை என்று கூறும் கதையா என்று கேட்க கோபமடைந்த வனிதா, உங்களையெல்லாம் எங்கிருந்து புடுச்சிட்டு வந்தார்கள் என்று கம்மெண்ட் அடித்து சிரித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Hari nadar acts as hero with vanitha 2k azhaganathu kaathal movie story

Next Story
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?top 5 tamil tv serial, roja, bharathi kannamma, namma veettu pillai, vanathai pola, டாப் 5 சீரியல், சன் டிவி, நம்ம வீட்டு பிள்ளை, ரோஜா, வானத்தைப்போல, பாரதி கண்ணம்மா, sun tv, vijay tv, sut majority, bacindia
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com