சாலை விபத்தில் பலியான பிரபல நடிகரின் தந்தை.. சோகத்தில் திரையுலகம்

அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகனும், ஜுனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

என்.டி.ராமாராவ்:

தெலுங்கு சினிமாவின் முன்னாள் நடிகரும்,  ஆந்திராவின்  முன்னாள் முதல்வருமாக இருந்தவர்  என்.டி.ராமாராவ். தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ஆரின் மகன்  நந்தமுரி ஹரிகிருஷ்ணா  இன்று காலை கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் விபத்து :

தெலுங்கு சினிமாவில் என்.டி. ஆர் குடும்பம் என்றால்  மரியாதையும்,  மாஸும் பறக்கும். நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜூனியர்  என்.டி.ஆர் டோலிவுட்டில்  நவம்பர் 1 ஹீரோக்களில் ஒருவர். இவரது நடனத்துக்கு  தெலுங்கு ரசிகர்கள்  அடிமை. இவரது திரைப்படம் வெளிவரும் நாட்களில் ஆந்திராவே திருவிழா போல் காணப்படும்.

நந்தமுரி ஹரிகிருஷ்ணா

மகனுடன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா

இவரது தந்தையின் இறப்பு செய்தி தற்போது ஆந்திராவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 61 வயதாகும் ஹரிகிருஷ்ணா  நல்கொண்டா அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று நிலைதடுமாறி விபத்தில் சிக்கியது.

இதில் படுகாயம் அடைந்த நந்தமுரி ஹரிகிருஷ்ணா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த சிலமணி நேரத்திலியே அவரது உயிர் பிரிந்தது. அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close