ரஜினி, அஜித் நடித்த விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா?

ரஜினி, அஜித், தனுஷ், த்ரிஷா, ஆண்டிரியா, போன்ற நட்சத்திரங்களின் இதுவரை பார்த்திராத விளம்பர படங்களின் தொகுப்பை கண்டுகளியுங்கள்.

வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பி வரும் நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற சந்தேகம் பலரிடம் உண்டு. திரைப்படங்களில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர்கள் நடித்த விளம்பரத்தின் தொகுப்பு இது. கண்டு மகிழுங்கள்.

1. அஜித் குமார் – மியாமி குஷன்ஸ் காலணிகள்

இப்போது சால்ட் பெப்பர் ஸ்டைலில் அசத்தும் தல அஜித், தனது இளமைப் பருவத்தில் விளம்பரங்களில் நடித்தார். பாரு பாரு என்று அவரே அழைக்கிறார். நீங்களும் பாருங்கள்

2. நயன்தாரா – மேன்ஷையர் ஷோரூம்

தமிழ் திரையுலகில் சைஸ் சீரோ நாயகியாக வளம் வரும் நயன்தாரா நடித்த முதல் விளம்பரம் இது. தன் வசீகரிக்கும் அழகில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் இவர், அன்று யார் அழகில் மயங்குகிறார்?

3. தமன்னா – ஃபேர் & லவ்லி நோ மார்க்ஸ்

“அடடா! என்ன அழகு. சீரான சருமம். தமன்னா வெள்ளை நிறம் யாருக்கு வரும்?” என்று வியந்தவரா நீங்கள். அவர் அழகின் ரகசியத்தைக் கூறியிருக்கிறார். பாருங்கள்.

4. விக்ரம் – டோரினோ கூல்டிரிங்க்

வெற்றிப்படங்களை அளித்து வரும் சியான் விக்ரம் தனது மகனை துலைத்துவிட்டு தேடுகிறார். குறும்பு சுட்டி அப்படி எங்கே ஓடுகிறான்? காரணம் கீழே.

5. திருஷா – ஹார்லிக்ஸ்

திருஷாவுக்கு இப்படியொரு மகனா. தன் வாலு பயன் ஓட்டத்தை நிறுத்த திருஷாவுக்கே ஹார்லிக்ஸ் தேவை.

6. சமந்தா – ஆஷிகா தங்கநகை கடை; அரசன் சோப்; மஞ்சள் தூள்.

“சமந்தாவா இது?”…. அட ஆமாம். சமந்தா தான் இது. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் மாடலிங்க் மற்றும் விளம்பரங்களில் நடித்த சமந்தா தான் இது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு முன் அவர் இப்படிதான் இருந்தார்.

7. ரஜினிகாந்த் – பாம் கோலா

கியா ரே? விளம்பரமா?… இன்றையக்கு மாஸ் ‘காலா’. அன்று கூல் கோலா. ‘பாம் கோலா’

8. தனுஷ் – டாடா நானோ கார்

3 திரைப்படத்தின் கொலைவெறி பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமானார் தனுஷ். அதன் பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் ஹிந்தி விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்?

9. மாதவன் – ஃபேர் அண்ட் லவ்லி

ஊரே மேடி மேடி என்று அவரின் சிரிப்பில் மெய்மருந்து இருக்க, இவரின் கவனத்தை ஈர்த்த இந்தப் பெண் யார்?

10. மிர்ச்சி சிவா மற்றும் ஆண்ட்ரியா – லியோ காபி

சிவாக்கு நன்றாகப் பேச தெரியும், ஆண்ட்ரியாவுக்கு நன்றாக பாடத் தெரியும் என்று நினைத்தபோது தான் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளனர். முதலில் நடித்த விளம்பரம் – ‘லியோ காபி’.

11. நமிதா – எஸ் எம் சில்க்ஸ்

‘மச்சான். நமிதாவா இது?’ என்று அசந்து போகும் அளவிற்கு அழகு. திரைப்பயணத்தை துவங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நமிதா நடித்த விளம்பரம்.

12. ஆர்யா – ஒலிம்பிக் திருமண அழைப்பிதழ்

ஆர்யாவின் திருமணத்திற்குப் பெண் பார்க்கும் படலத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது.வரும் ஆண்டு நடக்க இருக்கும் திருமணத்திற்கு அப்போதே அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்துவிட்டார் இவர். இவர் நடித்த விளம்பரம் காணுங்கள்.

×Close
×Close