/indian-express-tamil/media/media_files/2025/05/04/ynheYaPf7a3z2HkkPDsz.jpg)
“அவள் உலக அழகியே.. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!
/indian-express-tamil/media/media_files/2025/05/04/cTjV51XFAwMhm2tyCTEc.jpg)
தனது அழகினால் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரிஷா!
தமிழ் திரையுலகில் 'லேசா லேசா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து நடிகையான திரிஷா, அமீரின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகினால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Trisha.jpg)
வெற்றிப் படங்களில் நடித்து கவனம் ஈர்த்த திரிஷா!
விக்ரமின் சாமி, விஜய்யின் கில்லி, எனக்கு 20 உனக்கு 18, உனக்கும் எனக்கும், அபியும் நானும், மன்மதன் அம்பு, மங்காத்தா, கொடி, 96, பொன்னியின் செல்வன் என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் திரிஷா.
/indian-express-tamil/media/media_files/2025/03/26/7j1zC5kkwSsJxjEh1y2J.jpg)
டாப் ஹீரோக்களுடன் போட்டிபோட்டு நடித்த திரிஷா!
விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ரவி எனத் தொடர்ந்து டாப் ஹீரோக்களோடு நடித்த திரிஷாவுக்கு கமலுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினியோடு மட்டும் நடிக்காமல் இருந்த அவருக்கு 'பேட்ட’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பும் கிடைத்தது.
/indian-express-tamil/media/media_files/2025/05/04/xNZnn4TjtMscPMUVX14S.jpg)
வெறும் கிளாமர் ரோல் மட்டும் திரிஷா ஏற்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/25/rQohAlEq8e892h9vCs6l.jpg)
‘வயதாகி விட்டது’, ‘இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்’ போன்றவை சமூக வலைதளங்களில் த்ரிஷா மீது வீசப்படும் கேலிகள். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள், அவதூறுகளை எதிர்கொண்டாலும் அவற்றை புறந்தள்ளி 20 ஆண்டுகள் திரைத்துறையில் நாயகி அந்தஸ்துடன் நீடிப்பதே பெரும் சாதனைதான்.!
/indian-express-tamil/media/media_files/2024/12/27/UwQXdQtCbcpJamoTrOKi.jpg)
‘மௌனம் பேசியதே’வில் சந்தியாவாக வசீகரித்த த்ரிஷா 20 ஆண்டுகளை கடந்தும் குட் பேட் அக்லியில் ரம்யாவாக ரசிகர்களின் மனதை ஆண்டு கொண்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.