New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/New-Project90.jpg)
உதயநிதியின் மகன் இன்ப நிதியின் புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளான நிலையில் உதயநிதி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்று பேசினார். உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இந்த படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கி இருக்கிறார். ஸ்ரீகாந்த், பிரச்சனா, சதீஷ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.
தனிப்பட்ட விஷயம்
ஏற்கனவே படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யு ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படம் வாபஸ் பெறப்பட்டது. உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி படம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் 'கண்ணை நம்பாதே' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனலுக்கு படக்குழு பேட்டி அளித்தனர். தொகுப்பாளர் படக்குழுவினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது உதயநிதியின் மகன் இன்ப நிதியின் புகைப்படம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உதயநிதி, "அது அவருடைய Personal Life. இன்பநிதிக்கு 18-வயது ஆகிவிட்டது. He is an Adult. நான் பெற்றோராக இருக்கிறேன். அது எனக்கும், என் மனைவிக்கும், அவருக்குமான தனிப்பட்ட விஷயம். அதை பொதுவெளியில் சொல்ல விரும்பிவில்லை. அவருக்கு சுதந்திரம் உள்ளது.
அரசியல் பின்புலத்தில் இருப்பதால் இம்மாதிரியான விமர்சனங்கள் வருகிறது" என்று கூறினார். அண்மையில் இன்ப நிதி அவர் தோழியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் உதயநிதி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.