சீறுநீரக செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமான கொண்ட நடிகர் போண்டா மணி கடந்த 1991-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த இவர், வடிவேலுவின் காமெடி குரூப்பில் முக்கிய நடிகராக திகழ்ந்தார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போண்டா மணி மருத்துவமனையில் அனுமுதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளதாகவும் அவருக்கு உதவி செய்யுங்கள் என்று நடிகர் பெஞ்சமின் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டா மணியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் போண்டா மணி உங்கள் கையை காலாக நினைத்து நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் போண்டா மணியின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கானமுழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக போண்டா மணியை போனில் தொடர்புகொண்டு பேசிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் தற்போது அவரது குடும்பத்திற்கு தேவையாக பணஉதவியை தனது மனிதநேய மன்றத்தில் இருந்து வழங்கியிருப்பதாகவும் மேலும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“