தர்மேந்திராவுடன் தனி வீட்டில் வழக்கத்திற்கு மாறான திருமண வாழக்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இது குறித்து தான் ஒருபோதும் வருத்தப்படவில்லை என்றும் நடிகை ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் தர்மேந்திரா – ஹேமா மாலினி. தனது நடிப்பின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தர்மேந்திராவுக்கு பார்கஷ் கவுர் என்பருடன் கடந்த 1954-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 குழந்கைகள் இருந்த நிலையில், தர்மேந்திரா கடந்த 1980-ம் ஆண்டு நடிகை ஹேமா மாலினியை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு இஷா தியோல், ஆஹனா தியோல் என்ற இரு மகள்கள் உள்ளனர். தர்மேந்திரா 4 குழந்தைகளுக்கு தந்தை என்றாலும், அவருடன் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையை வாழத் தொடங்கிய ஹேமா மாலினி, வாழ்க்கை என்னிட்டம் எப்படி வந்ததோ அதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன் என்றும், எதையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
லெக்ரின் ரிட்டோ (Lehren Retro) உடனான ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய ஹேமா மாலினி, தர்மேந்திராவுடன் ஒரு தனி வீட்டில் வசிக்க முடிவு செய்ததாலும், தங்களின் இரண்டு மகள்களை வளர்ப்பதாலும், அவர் ஒருவித பெண்ணிய சின்னமாக மாறிவிட்டார் என்றும், அவர்களின் அசாதாரண வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், தர்மேந்திரா எப்போதும் தங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் என்று ஹேமா கூறியுள்ளார்.
மேலும் யாரும் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ விரும்ப மாட்டார்கள். ஆனால் எது நடக்க வேண்டுமோ அது தானாகவே, நடக்கும். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், யாரும் தங்கள் வாழ்க்கையை இப்படி வாழ விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதாரண குடும்பத்தைப் போல ஒரு கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைய வழி இல்லாமல் போய்விடுகிறது. நான் அதைப் பற்றி வருத்தப்படவில்லை, நான் என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு என் இரண்டு குழந்தைகள் உள்ளனர், நான் அவர்களை நன்றாக வளர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஹேமா மாலினி, தான் நீண்ட காலமாக ‘குரு மா’வைப் பின்பற்றி வருவதாகவும், அவர் தனது வாழ்க்கையில் மட்டுமல்ல, இது போன்ற முக்கியமான தனிப்பட்ட தருணங்களிலும் தன்னை வழிநடத்தியதாகவும் கூறியுள்ளார். அதேபோல் தங்கள் குழந்தைகளுக்காக தர்மேந்திரா ‘எப்போதும்’ இருந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை கூறியுள்ளார். ஹேமாவும் தர்மேந்திராவும் கடந்த 1980 இல் திருமணம் செய்து கொண்டனர்.
அந்த நேரத்தில், தர்மேந்திரா பிரகாஷ் கவுரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சன்னி மற்றும் பாபி, மற்றும் மகள் அஜீதா மற்றும் விஜேதா என 4 குழந்தைகள் இருந்தனர். அதேபோல் ஹேமா மாலினியுடன், ஈஷா மற்றும் அஹானா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஹேமா மாலினி, ஈஷா மற்றும் அஹானா ஆகியோர் தர்மேந்திராவின் பேரன் கரண் தியோலின் சமீபத்திய திருமண விழாக்களில் கலந்து கொள்ளவில்லை, இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“