மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து நீங்கள் பெரிதும் அறியாத 10 விஷயங்கள்.
1. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. துணைவன் என்ற திரைப்படம் தான் அவருக்கு முதல் படம்.
2. ஸ்ரீ அம்மா யாங்கர் ஐயப்பன் என்பதுதான் ஸ்ரீதேவியின் உண்மையான பெயர். திரையுலகுக்காக ஸ்ரீதேவி என பெயர் மாற்றிக்கொண்டார்.
3. ஸ்ரீதேவி மற்றும் அனில் கபூர் இணைந்து நடித்த பாலிவுட் படங்கள் மிகப்பெரும் வெற்றியை அடைந்தன. இருவரும் 16 படங்கள் இணைந்து நடித்தனர். அனில் கபூர், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/anil-kapoor-5-242x300.jpg)
4. தமிழில் கமல்ஹாசனுடன் அதிக படங்களை இணைந்து நடித்தார். 16 வயதினிலே, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், மீண்டும் கோகிலா ஆகிய திரைப்படங்கள் ஸ்ரீதேவிக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தன.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/sridevi-kamal-hassan-300x160.jpg)
5. ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் நடிப்பதற்காக, ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஸ்ரீதேவியை அனுகினார். ஆனால், பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக மின்னிய ஸ்ரீதேவி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/steven-spielberg-sridevi-300x264.jpg)
6. பல இந்தி திரைப்படங்களில் அவர் குரல் கொடுத்ததில்லை. ஏனென்றால் அவருக்கு இந்தி புலமை கிடையாது. நடிகைகள் ரேகா, நாஸ் ஆகியோர்தான் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தனர்.
7. திருமணத்திற்கு பிறகு திரையுலகைவிட்டு சிறிது காலம் விலகிய ஸ்ரீதேவி, மீண்டும் 2002-ஆம் ஆண்டு சக்தி எனும் திரைப்படம் மூலம் மீண்டும் வந்தார். ஆனால், அதன் பின் தன் இரண்டாவது குழந்தைக்கு அவர் தாயானதால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், கரீஸ்மா கபூர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
8. 13 வயதில் அவர் நடித்த மூன்று முடிச்சு திரைப்படம் தான், அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/moondru-mudichu-sridevi-300x237.jpg)
9. 1992-ஆம் ஆண்டு மாதுரி தீட்சித் நடித்த ‘பேட்டா’ திரைப்படம் முதலில் ஸ்ரீதேவிக்குதான் வழங்கப்பட்டது. ஆனால், நிறைய படங்களில் அனில் கபூருடன் நடித்ததால் அந்த வாய்ப்பை மறுத்தார். தார் திரைப்படத்தில் ஜூஹி சாவ்லாவின் கதாபாத்திரமும் முதலில் ஸ்ரீதேவிக்குதான் வழங்கப்பட்டது
10.2013-ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கு இந்திய அரசின் மிகப்பெரும் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.