Advertisment

அயலான் VS கேப்டன் மில்லர்; பொங்கல் ரேஸில் யார் வின்னர்?

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தமிழில் கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட படங்களும், மகர சக்ராந்தியை தொடர்ந்து தெலுங்கில் குண்டூர் காரம், ஹனுமன் உள்ளிட்ட படங்களும் வெளியாகின.

author-image
WebDesk
New Update
Captain Miller Ayalan

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படங்கள் ளெியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

dhansuh | siva-karthikeyan | pongal-festival | பொங்கல் பண்டிகை கடந்த வாரம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகை தினத்தில் தமிழ்நாட்டில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

அதேநரம் கேரளத்தில் ஜெயராமின் ஆப்ரஹாம் ஓஸ்லர், தெலுங்கில் குண்டூர் காரம், ஹனுமன், சைந்தவ், நா சாமி ரங்கா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

தமிழ், இந்தியில் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் தெலுங்கில் ஹனுமன் மற்றும் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்கள் வெற்றி நடைபோடுகின்றன.

தமிழில் கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலவரப்படி கேப்டன் மில்லர் ரூ.50 கோடி வசூலை தாண்டிவிட்டது. சிவகார்த்திகேயனின் அயலான் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கை பொறுத்தவரை மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ரூ.120 கோடி வசூலும், ஹனுமன் ரூ.100 கோடி வசூலையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஹனுமன் படத்துக்கு இந்தியிலும், கேப்டன் மில்லர் படத்துக்கு கேரளத்திலும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pongal Festival Siva Karthikeyan dhansuh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment