Hero Full Movie Leaked In TamilRockers: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹீரோ படம் நேற்று வெளியாகியுள்ளது.
Advertisment
கடந்த ஆண்டு விஷால், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இதனை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பொருட்செலவில் ஹீரோ தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ படம் என்பதால், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என ஏகத்துக்கு செலவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று வெளியான இப்படம், திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளது. பைரஸியை சமாளிக்க ஹீரோ படக்குழு புதிய டெக்னிக்கை பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிட்டாலும், தமிழ்ராக்கர்ஸ், தமிழ் யோகி, குட்டி மூவிஸ் என பல ஆன்லைன் பைரஸி தளங்களில் ரசிகர்கள் படத்தை வேகமாக டவுன்லோடு செய்து பார்த்து வருவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் பெரும் தலைவலிக்கு ஆளாகியிருக்கிறார்கள் படக்குழுவினர்.