நீங்க போய் நடிப்பு கத்துக்கிட்டு வாங்க; ஹீரோ கருணாஸ்க்கு வந்த முதல் விமர்சனம்: எந்த படத்துக்கு தெரியுமா?

சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர்தான் ஹீரோவாக நடித்த திரைப்படத்திற்கு கிடைத்த முதல் விமர்சன அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர்தான் ஹீரோவாக நடித்த திரைப்படத்திற்கு கிடைத்த முதல் விமர்சன அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karunas Complaint

சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடகராகவும், குணச்சித்திர நடிகராகவும், தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்தவர் கருணாஸ். இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அவர், தனது ஆரம்ப காலத்தில் "நடிப்பைக் கற்றுக்கொண்டு வாருங்கள்" என்ற விமர்சனத்தை எதிர்கொண்டதாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த விமர்சனத்திற்கு உள்ளான படம் எது என்பது குறித்து அவரே பகிர்ந்துகொண்டார்.

Advertisment

கருணாஸ்  2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான 'நந்தா' திரைப்படத்தில் "லொடுக்கு பாண்டி" என்ற கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 'காதல் அழிவதில்லை', 'திருடா திருடி', 'பிதாமகன்' என பல படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்தார்.

காமெடி நடிகராக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கருணாஸ், 2008ஆம் ஆண்டு வெளியான 'திண்டுக்கல் சாரதி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் வெற்றி பெற்ற 'வடக்கு நோக்கி யந்திரம்' படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தில், கருணாஸின் நடிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் கதாநாயகனாக நடித்தபோது, அந்தப் படம் குறித்து எந்த விமர்சனமும் ஆனந்த விகடன் பத்திரிகையில் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஆனால், அதற்கு சில காலத்திற்குப் பிறகு, அவர் சொந்தமாக தயாரித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' என்ற படத்திற்கு வந்த விமர்சனம் அவரை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார். அந்த விமர்சனத்தில், “ஹீரோவாக நடித்த கருணாஸ், கொஞ்சம் நடிப்பு கற்றுக்கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் இன்றும் நினைவுகூர்கிறார். ஒரு கலைஞனாக, இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்கள் எவ்வளவு வலியைத் தரும் என்பதை அவர் உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளார்.

Advertisment
Advertisements

ambasamuthiram ambani

இருப்பினும், இந்த விமர்சனங்களை அவர் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டுள்ளார். தனது 25 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கலைஞரிடமிருந்து கலைமாமணி விருதைப் பெற்றதுதான் தனக்குக் கிடைத்த முதல் மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் பெருமையுடன் கூறுகிறார்.  

திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் முத்திரை பதித்தார். அதேபோல், விருமன், சூரரைப் போற்று, அசுரன் போன்ற படங்களில் அவரது குணச்சித்திர நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கடைசியாக அவர் விமலின் போகுமிடம் வெகுதூரமில்லை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

Karunas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: