Advertisment

ஹீரோ விமர்சனம்: திறமைக்கும், மார்க்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை

Siva Karthikeyan: சூப்பர் ஹீரோ தொடரான ‘சக்தி மான்’ 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்டான ஒன்று.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hero review rating, Sivakarthikeyan

Sivakarthikeyan Hero

Hero Review Rating : ’இரும்புத்திரை’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஹீரோ’. இதில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், அபாய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

Advertisment

தமிழில் நேரடியாக சூப்பர் ஹீரோ களத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட படங்கள் மிக மிக குறைவு. அந்த வகையில் 90-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹீரோ தொடரான ‘சக்தி மான்’ 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்டான ஒன்று. படத்திலும் அப்படித்தான். சக்தி மானைப் பார்த்து வளரும் சிவகார்த்திகேயன் தானும் அதுபோல் சூப்பர் ஹீரோவாக வேண்டும் என விரும்புகிறார். பள்ளியில் ஒவ்வொரு மாணவனும் தான் டாக்டர் ஆக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும் என்று இருக்க, சிவகார்த்திகேயன் மட்டும் சக்திமான் போல் ஆக வேண்டும் என்கிறார்.

பின்னர் சக்தி மான் காப்பாற்றுவார் என விபரீத முடிவொன்றை எடுக்க, விளைவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சூப்பர் ஹீரோ என்பது கற்பனை கதாபாத்திரம், நம்ம பிரச்னையை நாம தான் பாத்துக்கணும் என அப்போது தான் அவருக்கு புரிகிறது. பின்னர் வளர்ந்ததும் பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வருகிறார் சக்தி (சிவகார்த்திகேயன்). அதில் போலி சான்றிதழ்கள் அடித்து கொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரின் பகுதியில் வசித்து வரும் மதி (இவானா), ஏரோநாட்டிக்கல் படிக்க விரும்புகிறார். அவளின் ஆசையை நிறைவேற்ற முயல்கிறான் சக்தி. ஆனால் மதியின் கண்டுபிடிப்பை திருடிக் கொண்டு, அவளுக்கு இடம் இல்லை கையை விரிக்கிறார்கள். இதனால் மனமுடைந்த மதி தற்கொலை செய்துக் கொள்கிறாள்.

மதி போன்ற பல புத்திசாலி மாணவர்களைப் பராமரித்துவரும் சத்யமூர்த்தியைச் (அர்ஜுன்) சந்திக்கிறார் சக்தி. மூர்த்தி ஏன் வெளியுலகின் பார்வையிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார், வில்லன்களின் நோக்கம் என்ன, அவர்களை சக்தி என்ன செய்தார் என்பது தான் மீதிக் கதை.

சினிமாவுக்கு அறிமுகமாகி விரைவில் முன்னணி நடிகராக உயர்ந்து, சில சறுக்கள்களை சந்தித்த சிவகார்த்திகேயன், ‘நம்ம வீட்டு பிள்ளை’யில் அதனை சரிசெய்தார். ’ஹீரோ’ படத்தில் முதல் பாதியில் காதல், காமெடி, இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார். நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு இது தமிழில் முதல் படம். சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அப்பா பிரியதர்ஷம் பெரும் பெயர் பெற்ற இயக்குநர், அம்மா லிசி பிரியதர்ஷன் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதனால் கல்யாணிக்கு நடிப்பு அவ்வளவு கடினமாக இருக்காது என்றே தெரிகிறது.

மித்ரனின் முதல் படமான இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய அர்ஜூன் இதில் பாஸிட்டிவாக அசத்தியிருக்கிறார். யுவனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படமாக சிறந்த முயற்சி!

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment