/tamil-ie/media/media_files/uploads/2019/12/Sivakarthikeyan-Hero-Trailer.jpg)
Sivakarthikeyan Hero
Siva Karthikeyan's Hero Trailer: விஷால், அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், தற்போது ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
இவர்களுடன் ரோபோ சங்கர், இவானா என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 20-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே ஹீரோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என காத்திருந்தார்கள் ரசிகர்கள். தற்போது ஹீரோ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், பி.எஸ். மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இணையத்தில் ஹீரோ ட்ரைலர் வெளியிடப்பட்டது. எல்லோரும் பள்ளியில் படிக்கும்போது டாக்டர், கலெக்டர், வக்கீல் என பெரியாளாக வேண்டும் என நிகைக்கும் போது, அப்போதே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்கிறார் சிவகார்த்திகேயன். எல்லாரும் சூப்பர் ஹீரோன்னு ஒன்னு இல்லன்னு சொல்றாங்க, ஆனா சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் ‘சூப்பர் ஹீரோ’ என பஞ்ச் வசனமும் வைத்திருக்கிறார்கள். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.