‘ஜெய் ஹோ’ பாடல் கண்ணழகிக்கு திருமண நிச்சயம் – காதலன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

‘ஜெய் ஹோ… ஜெய் ஹோ’ எனும் இந்த வார்த்தைகள் தான் நம் இசைப்புயல் ரஹ்மானை, ஆஸ்கர் ரஹ்மானாக மாற்றியது. கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘ஸ்லாம் டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ எனும் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ரஹ்மானின் இசைக்கு அடுத்தபடியாக அப்படத்தின்…

By: November 22, 2019, 6:35:54 PM

‘ஜெய் ஹோ… ஜெய் ஹோ’ எனும் இந்த வார்த்தைகள் தான் நம் இசைப்புயல் ரஹ்மானை, ஆஸ்கர் ரஹ்மானாக மாற்றியது.

கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘ஸ்லாம் டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ எனும் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ரஹ்மானின் இசைக்கு அடுத்தபடியாக அப்படத்தின் ரசிகர்கள் ரசித்தது ஹீரோயின் ஃப்ரீடா பின்டோ-வை தான். அழகு, அமைதி, சொக்கும் கண்கள், டார்க் ஸ்கின் என ரசிகர்களை கிறங்க வைத்தார்.

அப்படம் ரிலீசான பிறகு, அவருக்கு குவிந்த லவ் ஆஃபர்கள் ஏராளம். ஆனால், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஃப்ரீடா, அதன் பிறகு காதல் வலையில் வீழ்ந்தார்.

கோரி ட்ரேன் என்பவரை ஃப்ரீடா நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நிச்சயம் முடிந்துள்ளது. இதனை, ஃப்ரீடா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தவிர, தனது காதலனுடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்களையும் புகைப்படங்களாக போஸ்ட் செய்துள்ளார்.

சமூக தளங்களில் இந்த க்யூட் காதல் ஜோடியின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Heroine freida pinto gets engaged to boyfriend cory tran

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X