Highest Grossing Of Bollywood: 'கபீர் சிங், உரி: த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாரத், மிஷன் மங்கள், கேசரி, டோட்டல் தமால், சூப்பர் 30, கல்லி பாய், டி டி பியார் தே, மற்றும் மணிகர்னிகா ஆகிய படங்கள் தான் 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்களின் பட்டியலில் முன்னணி இடம் பிடித்திருக்கின்றன.
1. கபீர் சிங்
ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள கபீர் சிங் 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இயக்குனர் சந்தீப் வாங்காவின் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இது ரூ .278.24 கோடி வசூலித்து, பல சாதனைகளை முறியடித்துள்ளது.
2. உரி: த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் சாதனை புரிந்ததோடு, சமீபத்தில் நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றது, சிறந்த இயக்குநராக ஆதித்யா தார் மற்றும் சிறந்த நடிகராக விக்கி கெளஷல் தேசிய விருது பெற்றுள்ளனர். இதன் வசூல் ரூ. 245.36 கோடி.
3. பாரத்
ஜூன் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், தபு, சுனில் க்ரோவர், திஷா பதானி மற்றும் ஜாக்கி ஷெராஃப் நடித்திருந்தனர். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்த இப்படம் மொத்தம் ரூ. 211.07 கோடி வசூல் செய்தது.
4. மிஷன் மங்கள்
அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் நடித்துள்ள இந்தப் படம் சுதந்திர தின வெளியீடாக ரிலீஸாகி, தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது வரை 164.61 கோடி வசூல் செய்துள்ளது.
5. கேசரி
அக்ஷய் குமார் மற்றும் பரினிதி சோப்ரா நடித்திருந்த இப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றதோடு, வாழ்நாள் முழுவதும் ரூ .154.41 கோடி வசூல் செய்துள்ளது.
6. டோட்டல் தமால்
பிப்ரவரி 22-ம் தேதி திரைக்கு வந்த, இந்தப்
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன, இருப்பினும் அது ரூ.154.23 கோடியை ஈட்டியது.
7. சூப்பர் 30
ஜூலை 12-ஆம் தேதி வெளியான இதில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். கணிதவியலாளர் ஆனந்த்குமாரின் வாழ்க்கையையும் அவரது கல்வித் திட்டமான சூப்பர் 30 ஐ அடிப்படையாகக் கொண்ட இப்படம் ரூ .146.78 கோடியை ஈட்டியது.
8. கல்லி பாய்
ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இதனை சோயா அக்தர் இயக்கி இருந்தார். பார்வையாளர்களிடமிருந்து நிறைய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ .140.25 கோடி வசூல் செய்தது.
9. டி டி ப்யார் தே
அஜய் தேவ்கன், தபு மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்த டி டி பியார் தே-வும் இந்த ஆண்டு பார்வையாளர்களை கவர்ந்து, ரூ.103.64 கோடி வசூல் செய்துள்ளது.
10. மணிகர்னிகா
ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், கங்கனா ரனவத் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ .92.19 கோடியை ஈட்டியது.