விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ் பார்வையாளர்களின் கவனத்தை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பக்கமும் திரும்பியிருக்கிறது. இதற்கு காரணம், இந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்சியில் கலந்துகொண்டுள்ல நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், இந்தி பிக் பாஸையே தமிழில் பேச வைத்திருக்கிறார். அதிலும் பிக் பாஸை வைத்து தனது கனவரைக் கண்டிக்க வைத்துள்ளார்.
நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 3 டைட்டிலை வென்றவர். இவர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ருதிகா அர்ஜுன், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு காரணம், சல்மான் கானை சந்தித்து, பேசிப் பழக வேண்டும் என்ற ஆசையில் கலந்துகொண்டதாகக் கூறினார்.
ஸ்ருதிகா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேட் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தமிழ் பொண்ணு இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் என்பதை அறிந்து, அதிலும் அவர் பாதியில் எவிக்ஷன் ஆவதா என்று தமிழ் பார்வையாளர்கள் எல்லாம் களத்தில் குதித்து ஓட்டு போட்டு ஸ்ருதிகாவை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றினார்கள்.
அதுமட்டுமில்லாமல், இந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவை டைட்டில் வின்னராக்கும் முனைப்புடன் தமிழ் பார்வையாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஸ்ருதிகாவின் வெகுளித்தனமான விளையாட்டைப் பார்த்து இந்தி பார்வையாளர்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ் பார்வையாளர்கள், ‘நாங்கள் இந்தி தெரியாது போடானு’ சொன்னாலும், தமிழ் பொன்னு, இந்தி பிக் பாஸ் டைட்டிலை அடிக்கப் போராடுவோம் என்று கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நடிகர் சல்மான் கான் ஸ்ருதிகாவை வார வாரம் கலாய்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஸ்ருதிகா நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் உங்கள் கணவர் அர்ஜுன் என்ஜாய் பண்ண பாங்காக் சென்றுவிட்டார் சல்மான் கான் குடும்பத்தில் நெருப்பை பற்றவைத்துவிட்டார். ஸ்ருதிகா இதை முதலில் நம்பவில்லை. இதற்கு ஸ்ருதிகா பாங்காக்கில் கிடைப்பது எல்லாம் சென்னையிலேயே கிடைக்கிறதே என்று பதிலடி கொடுத்து அசத்தினார்.
சல்மான் கான், விடாமல் ஸ்ருதிகாவை ஜாலியாகக் கிண்டல் செய்து வருகிறார். சல்மான் கான் மட்டுமில்லை, பிக் பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக வந்த நடிகை மல்லிகா ஷெராவத்தும் அர்ஜுனை பாங்காக்கில் சந்தித்ததாகக் கூறி ஸ்ருதிகாவை வெறுப்பேற்றினார்.
இந்நிலையில், இந்தி பிக் பாஸும் ஸ்ருதிகாவை கிண்டல் செய்திருக்கிறார். எல்லோரும் பாங்காக் கதையைச் சொல்வதால், ஸ்ருதிகா தனது கணவரைக் கண்டித்துள்ளார். பிக் பாஸ் பாங்காக் செல்ல அர்ஜுன் எனக்கு ஸ்பான்ஸர் செய்கிறார் என கூறினார். இதைக் கேட்ட ஸ்ருதிகா, பாங்காக்கில் என்னென்ன நடக்கும் என உங்களுக்கு தெரியாது. அங்கு ஃபுட் மசாஜ், பாடி மசாஜ், சீப்பாக கிடைக்கும் என்றார்.
அர்ஜுனிடம் என்ன சொல்வது என்று பிக் பாஸ் கேட்க, “ஏய்” என்று ஸ்ருதிகா கடுமையான குரலில் சொல்ல, பிக் பாஸும் ஏய்னு சொன்னார். இதை அடுத்து, “நீ எங்கேயுமே சென்னையை விட்டு வெளியே போகவே கூடாது.” என ஸ்ருதிகா தமிழில் சொல்ல, இந்தி பிக் பாஸும் “போகவே கூடாது” என அழகாக தமிழில் சொன்னார்.
இப்படி இந்தி பிக் பாஸையே தமிழில் பேச வைத்த ஸ்ருதிகாவை தமிழ் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்தி பிக் பாஸை வைத்தே தனது கணவர் அர்ஜுனை ஜாலியாகக் கண்டித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.