குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று புகழ் பெற்ற நடிகை ஸ்ருத்திகா அர்ஜூன், தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷராவத் தான் ஸ்ருத்திகாவின் ரசிகையாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகா அர்ஜூன் சூர்யா நடிப்பில், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி உள்ளிட்ட நடித்த இவர், கடைசியாக, 2003-ம் ஆண்டு வெளியான தித்திக்குதே படத்தில் நடித்திருந்த இவர், அதன்பிறகு சினிமா மற்றும் சின்னத்திரையில், பங்கேற்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னரான இவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். இதனிடையே தற்போது இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18-வது சீசனில் போட்டியாளராக ஸ்ருத்திகா அர்ஜூன் களமிறங்கியுள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்ற முதல் தமிழர் இவர் தான்.
இந்தியில் சரளமாக பேச தெரிந்த இவர், நடுவில், சும்மா, பாவம் என்ற தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி, பிக்பாஸ் வீட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே பலரின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ருத்திகா அர்ஜூன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காட்டிய அதே குழந்தைத்தனமாக குறும்புத்தனத்தை காட்டி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலிவுட் நடிகை மல்லிகா ஷராவத், நான் தற்போது ஸ்ருத்திகாவின் ரசிகையாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில், உங்கள் கணவர் பாலி சென்றுவிட்டார் என்று மல்லிகா ஷராவத் சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சியாக ஸ்ருத்திகா, இல்லை நீங்கள் ப்ராங் பண்றீங்க. என் கணவருக்கு அவ்வளவு தைரியம் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“