இந்தியாவில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை போற்றும் வகையில், இன்று நீதிமன்றத்தில் திரைபபடம் ஒன்று திரையிடப்பட உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் இந்த திரைப்படம் யார் இயக்கியது என்ன படம் என்பதை பார்ப்போம்.
உலகளவில் திரைப்படங்கள் எடுப்பதில் முன்னணியில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இந்தியா. ஆண்டுக்கு சுமார் 500-1000 படங்களுக்கு மேல் வெளியாகி வரும் இந்தியாவில், அனைத்து படங்களும் வெற்றி பெற்றுவிடுகிறதா என்றால் இல்லை. அதே சமயம் கமர்ஷியல் மசாலா படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலக்கட்டத்தில் ஒரு சில படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.
கதைக்கு முக்கியத்துவம் குறிப்பாக பெண்களின் வாழ்வியல் குறித்து எடுக்கப்படும் சில படங்கள் சிறு பட்ஜெட் தான் என்றாலும் அதற்கேற்ற வசூலையோ, அல்லது அதைவிட அதிகமாகவே வசூல் செய்ய தவறியதே இல்லை. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் லாப்பட்டா லேடீஸ். கடந்த ஆண்டு இந்தியில் வெளியான இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரன் ராவ் இயக்கியிருந்தார். அமீர்கான் தயாரித்த இந்த படம் 4-5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
திருமணமான இரண்டு தம்பதிகள் ஒரே ரயிலில் பயணிக்கும்போது தவறுதலாக மணப்பெண் மாற்றம் நடந்துவிடுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக பாலின சமத்துவத்துடன் கூறியள்ள இந்த படத்தை ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உச்சநீதிமன்றத்தில் இன்று திரையிடப்பட உள்ளது.
இந்தியாவில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், பெரிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாலின சமத்துவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்ற லாப்பட்டா லேடீஸ் (தொலைந்துபோன பெண்கள்) திரைப்படம் திரையிடப்படும் இந்நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திர சூட், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கண்டு ரசிக்க உள்ளனர். மேலும் இயக்குனர் கிரன் ராவ், அமீர்கான ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“