கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதியும் முனைவர் பட்டம் பெறுகிறார்.
Advertisment
இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தேன். இப்போது அது நிறைவுற்றுளது. முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு வேலை பார்த்துக் கொண்டே படிப்பது கடினமாக இருந்தது. என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளியாகும்" என்றார்.
தொடர்ச்சியாக தமிழர் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். அவரிடம் பட்டம் வாங்குவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும். அதற்கு வேறு மாற்று இல்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "சந்திராயன்- 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. எனக்கு மியூசிக் அகாடமி தொடங்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்திருக்கிறேன்" என்றார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”