மகளுக்கு ‘இந்தியா’ எனப் பெயரிட்ட ’அவெஞ்சர்ஸ்’ நடிகர்!

அவரது மனைவியும் மாடல் மற்றும் நடிகையுமான எல்சா பெரும்பாலான பொழுதுகளை இந்தியாவில் செலவிட்டுள்ளாராம்.

By: August 11, 2020, 5:28:13 PM

‘தோர்’ என்ற கதாபாத்திரம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கரண்ட விட இது பெரிய ஷாக்கா இருக்கே…

ஆஸ்திரேலிய நடிகரான ஹெம்ஸ்வொர்த் இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் ஒரு நேர்காணலின் போது தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டுள்ளதன் காரணத்தை பகிர்ந்து கொண்டார். அவரது மனைவியும் மாடல் மற்றும் நடிகையுமான எல்சா பெரும்பாலான பொழுதுகளை இந்தியாவில் செலவிட்டுள்ளாராம். அதோடு அவர் இந்திய நாடும் , அங்குள்ள மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறாராம்.

அதன் காரணமாகவே அவர் தனது மகளுக்கு இந்தியா ரோஸ் என்று பெயரிட்டுள்ளாராம் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். அதோடு, இந்தியாவில் மக்கள் நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்திய படங்களில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்’ – சூர்யா வேண்டுகோள்

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள், ஹெம்ஸ்வொர்தின் இந்திய ரசிகர்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Hollywood actor chris hemsworth named his daughter india rose

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X