scorecardresearch

ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்: புதுக் கணவருக்கு இது 2-வது திருமணம்

இருவரும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காதலித்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் சில காரணங்களால் ஜெனிபர் இந்த திருமணத்தை ரத்து செய்தார்.

ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்: புதுக் கணவருக்கு இது 2-வது திருமணம்

ஹாலிவுட் சினிமாவில் அதிரடி நாயகியாக வலம் வருபவர் ஜெனிபர் லோபாஸ். 1986-ம் ஆண்டு வெளியான மை லிட்டில் கேர்ள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அன் ஃபனிஷ்டு லைஃப்,தி பாய் நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது பல படங்களை தயாரித்துள்ள ஜெனிபர், ஐஸ் ஏஜ் உள்ளிட்ட சில கார்ட்டூன் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்போது ஷார்ட்கன் வெட்டிங், தி மதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்போது 52 வயதாகும் ஜெனிபர் ஏற்கனவெ ஓஜானி நோஹ், கிரிஷ் ஜாட், மார்க் ஆண்டனி என 3 பேரை திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது 4-வது முறையாக  தனது முன்னாள் காதலரும் நடிகரும்இயக்குநருமான பென் அப்லிஹ் என்பரை திருமணம் செய்துள்ளார். பென் அப்லிஹ்-க்கு இது இரண்டாவது திருமணம்.

இவர்கள் இருவரும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காதலித்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் சில காரணங்களால் ஜெனிபர் இந்த திருமணத்தை ரத்து செய்தார். தற்போது தனது 4-வது திருமணமாக மீண்டும் தனது முன்னாள் காதலரான பென்னுடன் இணைந்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேஹாசில் கடந்த 17-ந் தேதி இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காதல் அழகானது, அன்பு கனிவானது, இது அன்பை பொறுமையாக மாற்றுகிறது. 20 வருடங்கள் பொறுத்திருந்து இணைந்திருக்கிறோம். ஒரு அற்புதமான குடும்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Hollywood actress jennifer lopez get married 4 th with her lover ben affleck

Best of Express