வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளை அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் குழுவினர் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய், சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்துள்ளார்.
மைக் மோகன் வில்லனாக நடித்தள்ள இந்த படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் நடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ந் தேதி கோட் படம் வெளியாக உள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் ஃபேண்டஸி படமான கோட் படத்தில் அதிக எண்ணிக்கையிலான விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகள் இருக்கும். இதன் காரணமாக இந்த விஎஃப்எக்ஸ் காட்சிகளை சிறப்பாப வடிவமைப்பதற்காக ஒரு ஹாலிவுட் குழுவுடன் கோட் பட தயாரிப்பு நிறுவனர் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும் கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். கோட் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி, சமீபத்தில் தனது சமூக ஊடகங்கள் பக்கத்தில் கோட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது அவர் புதிய அப்டேட்டும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நிறுவனத்தின் வெளிப்புறத்தின் படத்தைப் பகிர்வதன் மூலம் படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகளை மேற்கொள்ளும் குழுவினர் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற படங்களான,'அவதார்', 'கேப்டன் மார்வெல்', 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' போன்ற படங்களுக்கும் மேலும் பல ஃபேன்டஸி படங்களுக்கும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்த குழுவினர், தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்திற்கு விஎஃப்எக்ஸ் காட்சிகளை அமைக்க உள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனம் கோலிவுட்டில் நுழைகிறது.
இப்படத்தில் இளம் விஜயின் பகுதிகளை படமாக்க டி-ஏஜிங் டெக்னிக்கை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது, மேலும் கோட் படத்தில் ஹாலிவுட் பணியாளர்கள் பணியாற்றுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இன்னும் சில நாட்களுக்கு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகளை விஜய் கண்காணித்துவிட்டு, விரைவில் சென்னை திரும்புகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.