சினிமா ரசிகர்களை கவர உலகின் பல இயக்குனர்கள் சினிமா தயாரிப்பாளர்களும், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படம் தயாரித்தும் இயக்கியும் வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்று வந்தாலும் ஒரு சில படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.
இந்த வகையில், இந்தியாவில் சமீபத்தில் வெளியாக பாகுபதி 2 பாகங்கள், கேஜிஎஃப் 2 பாகங்கள், வசூலில் சாதனை படைத்த படங்களாக மாறியது. அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கல்கி படம் கூட ரூ1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 படங்களுமே வித்தியாசமான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புடன் இன்றைய உலகில் சாத்தியமில்லாத ஒரு கதைளத்தில் அமைந்திருக்கும்.
ஹாலிவுட்டில் இது போன்று பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் டூன் (DUNE) இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான நிலையில், 2-ம் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வேற்றுகிரகத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை பூமியில் இருப்பவர்கள் தெரிந்துகொண்டு அங்கிருக்கும் கனிமவளங்களை கொள்ளையடிப்பதே இந்த படத்தின் கதை.
இந்த படத்தை பார்க்கும்போது நாம் வேற்று கிரகத்தில் வாழ்வது போன்ற உணவுவை கொடுக்கும். 2 பாகங்களும் சேர்ந்து 5 மணி நேரம் கொண்ட இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனர். டேனிஸ் வில்லேனுவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் ஐஎம்.டிபி மதிப்பீட்டில் 8 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், 2-ம் பாகம் 8.6 ரேட்டிங் பெற்றுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, கூகுள் ப்ளே மூவிஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட இணைதளங்களில் இந்த இரு படங்களையும் பார்க்கலாம். இந்தியாவில் வெளியான பாகுபலி, கே.ஜி.எஃப், கல்கி உள்ளிட்ட படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“