உலக படங்களை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில் விலங்குகளை அடிப்படையாக வைத்து பல படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் விரைவில், வெளியாக உள்ள முஃபாசா தி லைன் கிங் என்ற படத்திற்கு தமிழில் டப்பிங் பேசியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக உலளவில் வெளியாகும் படங்கள், இந்தியா மொழிகளில் டப் செய்து வெளியிடுவதும் வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படங்கள் வெளியாது போன்றே ஆங்கில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
குறிப்பாக நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை விடவும், விளங்குகளை வைத்த தயாராகும் படங்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. நார்னியா, தி லைன் கிங், அவதார், எக்ஸ் மேன், அயன்மேன் உள்ளிட்ட பல படங்கள், தமிழில் டப் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள படம் முஃபாசா தி லைன் கிங் திரைப்படம்.
டிசம்பர் 9-ந் தேதி வெளிநாடுகளில் டால்பி தியேட்டர்களில் வெளியான இந்த படம் வரும் டிசம்பர் 20-ந் தேதி அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அதே சமயம் இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் டப்பிங் கலைஞராகவும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழிலேயே பல படங்கள் அவர்களது குரலில் வெளியாகியுள்ளது. அந்த வகையில், முஃபாசா தி லைன் கிங் படத்திற்கு தமிழில் டப்பிங் குரல் கொடுத்த நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் நடிகர் நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், கைதி அர்ஜூன் தாஸ், நடிகர் அசோக் செல்வன், ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இதில் முக்கிய கேரக்டரான முஃபாசாவுக்கு அர்ஜுன் தாஸ், டாகாவுக்கு அசோக் செல்வன், கிரோஸ் கேரக்டருக்கு நடிகர் நாசர், யங் ரபிகிக்கு விடிவி கணேஷ், டைமோன் கேரக்டருக்கு சிங்கம் புலி, பும்பாவுக்கு ரோபோ சங்கர் ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“