/tamil-ie/media/media_files/uploads/2019/09/Dhruv-Vikram.jpg)
Dhruv Vikram
Dhruv Vikram About Thalapathy Vijay: கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்க, சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார்.
அர்ஜூன் ரெட்டி திரைப்படத்துக்கு தமிழ் ரசிகர்களும் பெரிய ஃபேன் என்பதால், இதனை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஈ4 எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அர்ஜூன் ரெட்டியை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை வாங்கியிருந்தது. இயக்குநர் பாலா இயக்கிய இப்படம், ரிலீஸ் ஆகும் தருவாயில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியாகாமல் போனது.
Dhruv Vikram : Honest ah Sollanum na #Thalapathy fan ???? #BIGILpic.twitter.com/TfLEVMCnPx
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 16, 2019
தொடர்ந்து இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து முதலிலிருந்து தொடங்குவதாகவும் அதற்கும் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் ஈ4 நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஆதித்ய வர்மா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்துக் கொண்ட துருவ் விக்ரமிடம், “நீங்க தல ஃபேனா, இல்ல தளபதி ஃபேனா” என்று மாணவர்கள் ஆரவாரத்துடன் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் ஹானஸ்டா சொல்லணும்ன்னா தளபதி ஃபேன்” என பதிலளித்தார் துருவ். இதனால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர்.
விஜய்யும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.