உதயநிதிக்கு நன்றி சொன்ன ‘ஹனிமூன் ரிட்டர்ன்’ விக்கி: காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘ஹனிமூன்’ சென்று திரும்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan thanks to Udhayanidhi, vignesh shivan, udhayanidhi, Honeymoon return Vignesh shivan, Vignesh Shivan Nayanthara, நயன்தாரா, விக்னேஷ் சிவன், உதயநிதி, Tamil movie news, Tamil cinema stills, Tamil movie reviews, Tamil cinema reviews, Tamil movie reviews, Tamil actress stills, Tamil cinema wallpapers, Tamil movie HQ photos, Tamil actress hot stills, tollywood, Tamil movies updates, Tamil movie trailers

இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் ரசிகர்கள் பலரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்துக்கு பிறகு, தாய்லாந்து சென்று ஹனிமூனைக் கொண்டாடினார்கள். ஹனிமூன் ரிட்டர்ன் ஆன இயக்குநர் விக்னேஷ் சிவன், உதயநிதி ஸ்டாலினின் ஒரு ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியலில், திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ என்று உதயநிதி ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார்.

அண்மையில், இயகுநன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரித்திருந்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை உதயநிதி ஸ்டாலின் விநியோகம் செய்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றதையடுத்து, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் லலித், உதயநிதிக்கு ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ என்ற புகைப்படத்தை பரிசளித்தார். இதற்கு, உதயநிதி நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டில், “பரிசளித்ததற்காக தயாரிப்பாளர் லலித் சார் நன்றி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பெரும் வெற்றிக்கு நன்றி என்று இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

இதற்கு, ஹனிமூன் ரிட்டர்னாகி இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், உதயநிதிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். விக்னேஷ் தனது ட்வீட்டில், “உங்களுடைய பெரிய ரிலீசுக்கும் பெரிய ஆதரவுக்கும் நன்றி சார். மேலும், அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்ஸ் வெற்றிப் படங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பாதை தொடர இதயப்பூர்வமான வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Honeymoon return vignesh shivan thanks to udhayanidhi what reason