/indian-express-tamil/media/media_files/2025/03/04/HqdCV4o9XJXP1qWPLLdb.jpg)
சப்பாத்தி, பூரி, பரோட்டா, இட்லி, தோசை என அனைத்துக்கும் சிறந்த ஒரு சைடிஷ் இந்த வெள்ளை குருமா. இதை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று மிஸ்டர் க்ரிஷ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 கப்
முந்திரி - 10-12
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 2-3
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2-3
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5-6
பச்சை பட்டாணி - 1/2 கப்
உப்பு
செய்முறை:
முதலில், அரைக்க வேண்டிய பொருட்களை (தேங்காய், முந்திரி, கசகசா, பொட்டுக்கடலை, சோம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய்) சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
தாளித்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது, நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கடாயை மூடி காய்கறிகளை வேக விடவும். (அதிகமாக வேக விடக்கூடாது, குருமாவுடன் சேர்த்து வேகும்போது மேலும் வேகும்). காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
குருமா ஒரு கொதி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, குருமா திக்காகும் வரை 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விடவும், இல்லையெனில் குருமா அடி பிடிக்கும். இறுதியாக, குருமா நன்கு திக்காகி, எண்ணெய் பிரிந்து வரும்போது, அடுப்பை அணைக்கவும். சுவையான மற்றும் மணமான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை வெஜிடபிள் குருமா தயார். இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா, இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.